அகமதாபாத்தில் நேற்றும் இன்றும் 84வது தேசிய மாநாடு நடைபெற்றது. மேலும் காங்கிரஸ் செயற்குழு கூட்டம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டமும் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் அகமதாபாத் சென்றிருந்தார். நேற்று அங்குள்ள சபர்மதி ஆசிரமம் சென்றிருந்த அவர் திடீரென மயக்கம் அடைந்து கிழே விழுந்தார். இதனையடுத்து அங்கிருந்த காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ப.சிதம்பரத்தை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக ப.சிதம்பரம் மயங்கி விழுந்ததாக கூறப்பட்டது. இதனையடுத்து தனது தந்தையின் உடல்நிலை குறித்து அவர் மகன் கார்த்தி சிதம்பரம் கூறுகையில், தனது தந்தை நலமுடன் இருக்கிறார் என தெரிவித்து இருந்தார். இதனிடையே நேற்று ப.சிதம்பரம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடிக்கு தகவல் கிடைத்துள்ளது. உடனடியாக பா.சிதம்பரத்திற்கு சிறந்த சிகிச்சை அளிக்குமாறு மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டாவிடம் கூறினார்.
இதையும் படிங்க: தில்லை தீட்சிதர்களுக்கு எதிரான வழக்கு.. தள்ளுபடி செய்ய நீதிமன்றம் மறுப்பு.. கனகசபை மீது ஏறி தரிசனம் செய்வதை தடுக்க நீங்கள் யார்..?

இதனையடுத்து மத்திய சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டா குஜராத் முதல்வரை தொடர்பு கொண்டு ப.சிதம்பரம் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார். குஜராத் சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல் மருத்துவமனைக்கு நேரில் சென்று சிதம்பரத்திற்கு தேவையான மருத்துவ உதவியை உறுதி செய்தார்.
இதுகுறித்து பாஜக வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி எதுவாக இருந்தாலும், எந்த விருந்தினரும் பிரச்சனையை எதிர்கொள்ளாமல் இருப்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம். இது குஜராத்தின் விருந்தோம்பலை பிரகாசிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் இதில் குஜராத்தியான மோடி, தலையிடுவது தனிப்பட்ட கடமையாக உணர்ந்ததாகவும் அரசியலை நல்லெண்ணத்துடன் மோடி செயல்பட்டது அவரை கட்சி வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட தலைவராக காட்டுகிறது என்றம் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் தன்னை காப்பற்றிய அனைவருக்கும் நன்றி என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுக்குறித்த அவரது எக்ஸ் தள பதிவில், அதிக வெப்பம் காரணமாக, எனக்கு நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டது. அனைத்து சோதனைகளும் இயல்பாக இருப்பதாக தெரிவித்துள்ளவர், நான் இப்போது முற்றிலும் நலமாக இருக்கிறேன் என தெரிவித்துள்ளா். அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநரை மாற்றும் பேச்சுக்கே இடமில்லை.. 2026இல் புதிய முதல்வருக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார்.. பாஜக அதிரடி!!