செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள சிப்காட்டில் ரூ.515 கோடி முதலீட்டில் உலகத்தரம் வாய்ந்த கோத்ரேஜ் தொழிற்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொழிற்சாலையை நேரில் சென்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்து உற்பத்தியை தொடக்கி வைத்தார். மேலும் அந்த தொழிற்சாலையில் பார்வையிட்ட அவர் அங்கு பணிபுரியும் பெண்கள், திருநங்கைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், கோத்ரேஜ் நிறுவன பொருட்களின் உற்பத்திக்கான அதிநவீன தொழிற்சாலையை தொடங்கி வைப்பதில் தான் மகிழ்ச்சி அடைவதாகவும், வரலாற்று சிறப்புமிக்க தமிழ்நாட்டிற்கு வந்துள்ள கோத்ரேஜ் நிறுவனத்தை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். இந்த தொழிற்சாலையை தமிழ்நாட்டில் நிறுவுவதில் தங்களுக்கு உள்ள மகிழ்ச்சியை விட தனக்கு இரண்டு மடங்கு அதிக அளவு மகிழ்ச்சி என்றும் அதற்கு காரணம் நீங்கள் தமிழ்நாட்டின் மீது வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது எனக் கூறினார்.
இதையும் படிங்க: அடங்காத இலங்கை.. துடிக்கும் தமிழர்களை காப்பாற்ற ஸ்டாலின் கடிதம்!!

உலக நிறுவனங்களுக்கு தமிழ்நாடு தான் முகவரி என அறிவித்தது தனக்கு மகிழ்ச்சியாக உள்ளது என்றும் தமிழ்நாடு அரசுக்கும் கோத்ரேஜ் நிறுவனத்திற்கும் இது ஒரு வெற்றிகரமான நிகழ்வு எனவும் கூறினார்.
515 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொடங்கப்பட்டுள்ள இந்த நிறுவனம் 1,010 பேருக்கு வேலை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது எனக் கூறினார்.
இதன் மூலம் ஆயிரம் குடும்பங்கள் வாழப்போகிறது என்பதில் பெரு மகிழ்ச்சி அடைவதாகவும், 2023 ஆம் ஆண்டு கோத்ரேஜ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கையொழுத்தானதாகவும் 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அடிக்கல் நாட்டப்பட்டதாகவும், தற்போது தொழிற்சாலை தொடங்கப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது என்றும் கூறினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை யொட்டி மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலைகளில் க பல கிலோ மீட்டர் தூரத்துக்கு தி.மு.க. கொடி வைக்கப்பட்டிருந்தது. மேலும், கட்சித் தொண்டர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் சாலைகளில் நின்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு வரவேற்பு அளித்தனர்.
இதையும் படிங்க: மத்திய அரசால் வேதனை.. பிரதமருக்கு கடிதம் அனுப்பிய முதலமைச்சர் ஸ்டாலின்!!