புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் லஞ்சம் வாங்கியதாக சிபிஐ போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதற்கு பொறுப்பேற்று பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என்ற வலியுறுத்தி சட்ட சபையில் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை குண்டுகட்டாக வெளியேற்றிய நிலையில், சட்டசபை முழுவதும் பரபரப்பாக காணப்பட்டது.

புதுச்சேரி அரசின் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளராக இருந்த தீனதயாளன் லஞ்சம் வாங்கியதாக கூறி சிபிஐயால் கைது செய்யப்பட்டார். காரைக்காலில் உள்ள சீகல்ஸ் ஹோட்டலில், பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது அதிரடியாக நுழைந்த சிபிஐ அதிகாரிகள் அனைவரது செல்போன்களையும் பறிமுதல் செய்ததுடன் அதிரடி சோதனை நடத்தினர். அதேநேரத்தில் புதுச்சேரி புஸ்ஸி வீதியில் உள்ள பொதுப்பணித்துறை தலைமை அலுவலகத்திலும் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
இதையும் படிங்க: 'பீடை பாபு...' உன்னை சிறையில் வைக்காமல் இந்த சனி ஓயாது.. சேகர் பாபுவை சிதைத்த ஹெச். ராஜா.!
சுமார் 20 மணி நேர விசாரணைக்கு பிறகு தீனதயாளன் லஞ்சம் பெற்றது உறுதியானது. இதனையடுத்து தலைமை பொறியாளர் தீனதயாளன், ஒப்பந்ததாரர் இளமுருகு உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட ஒப்பந்ததாரர் அதிமுக முன்னாள் அமைச்சர் காமராஜின் உறவினர் என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில், இந்த விவகாரத்தை இன்று புதுச்சேரி சட்டசபையில் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் எழுப்பியதுடன், புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் ராஜினாமா செய்ய வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தினர். இதனால் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ், திமுக எம்.எல்.ஏக்களை சபையில் இருந்து வெளியேற்ற சபை காவலர்களுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார். பின்னர் திமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர்.
இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்! அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளோடு தேர்தல் ஆணையம் ஆலோசனை...