மகாராஷ்டிரா மாநிலம் புனே, சுவர்கேட் பகுதிக்கு வேலை விஷயமாக சென்ற 26 வயதான இளம்பெண், தனது வேலை முடிந்ததும் சொந்த ஊர் திரும்ப அதிகாலை பேருந்து நிலையம் வந்துள்ளார். தனது சொந்த ஊருக்கு செல்ல வேண்டிய பஸ் எந்த பகுதிக்கு வரும் என்பது தெரியாமல் பஸ் ஸ்டாண்டில் திருதிருவென விழித்தபடி நின்றுள்ளார். இளம்பெண் தனிமையில் நிற்பதை பார்த்த ஆசாமி ஒருத்தன், இளம்ப்பெண்ணை நோட்டமிட்டுள்ளான். அதிகாலை நேரம் என்பதால் பஸ் ஸ்டாண்டில் மக்கள் நடமாட்டம் இல்லை. தனியாக நிற்கிறோம் என்பதால் இளம்பெண் பதற்றம் அடைந்துள்ளார்.
அப்போது இளம்பெண்ணிடம் நெருங்கி வந்த அந்த ஆசாமி, பயப்படாதீர்கள் சகோதரி, நான் உங்களுக்கு உதவதான் வந்துள்ளேன் என நைசாக பேச்சுக்கொடுத்துள்ளான். சகோதரி என அழைத்ததால் அந்த இளம்பெண்ணும் சற்றே ஆறுதல் அடைந்து, அந்த ஆசாமியிடம் பேசி உள்ளார். தனது ஊருக்கு செல்லும் பஸ் எங்கே வரும் என தெரியாமல் விழிப்பதாகவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். உடனே நீங்கள் எங்கே செல்ல வேண்டும் என அந்த ஆசாமி கேட்க, சொந்த ஊரான சத்தாரா மாவட்டம் பால்டானுக்கு செல்ல காத்திருப்பதாக இளம்பெண் தெரிவித்துள்ளார்.

அங்கு செல்லும் பஸ் இங்கு வராதே என தெரிவித்த ஆசாமி, பஸ் நிலையத்தில் இருந்த மற்றொரு பகுதியை சுட்டிக்காட்டி அங்கு நிற்கும் பஸ்கள் தான் உங்களது ஊருக்கு செல்லும் என தெரிவித்துள்ளான். பிறகே அவனே வாருங்கள் நான் உங்களை பஸ் ஏற்றி விடுகிறேன் என அழைத்துச் சென்றுள்ளான். இளம் பெண்ணும் சகோதரன் முறையில் தானே அழைக்கிறான் என்று நினைத்து உடன் சென்றுள்ளார். அங்கு நின்றிருந்த ஒரு ஏசி பஸ்ஸை காட்டி, இதுதான் உங்களது ஊருக்கு செல்லும். ஏறிக்கொள்ளுங்கள் என நல்லவன் போல பேசியுள்ளான். ஒருவழியாக ஊருக்கு செல்லும் பஸ் கிடைத்ததே என அப்பெண்ணும் நிம்மதி பெருமூச்சுடன் பஸ்சில் ஏற போகும் போது, பஸ்ஸில் அ அனைத்து விளக்குகளும் அணைத்து வைக்கப்பட்டிருப்பதை கண்டார்.
இதையும் படிங்க: கிலன் பார் சின்ட்ரோம்’ நோய்க்கு முதல் உயிரிழப்பு: புனேயில் 100க்கும் மேற்பட்டோர் பாதிப்பு..

இதுகுறித்து அந்த ஆசாமியிடம் கேட்கவே, பஸ் எடுக்கும் சமயத்தில் தான் லைட் போடுவார்கள். அதுவரை இப்படிதான் இருக்கும். இன்னும் சற்று நேரத்தில் டிரைவர்கள், கண்டெக்டர்கள் வந்துவிடுவார்கள் என தெரிவித்துள்ளான். உங்களுக்கு பயமாக இருந்தால் டிரைவர் வரும் வரை நானும் உங்களுடன் காத்திருக்கிறேன் என பேசி உள்ளான். அவனது பேச்சை நம்பிய இளம் பெண் பஸ்சில் ஏறி அமர்ந்துள்ளார். சிறிது நேரத்தில் பஸ்சில் ஏறிய அந்த ஆசாமி, பஸ்சின் கதவை பூட்டிவிட்டு இளம்பெண்ணை பலாத்காரம் செய்துள்ளான். ஏசி பஸ் என்பதால் அனைத்து ஜன்னல்களும் அடைத்திருக்க, இளம்பெண் அலறியது வெளியே யாருக்கும் கேட்கவில்லை.

அதன்பின் அந்த ஆசாமி தப்பி ஓடிவிட, நடந்தது குறித்து தனது தோழிக்கு அந்த இளம்பெண் அழுதபடி போன் செய்து கூறியுள்ளார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து, பஸ் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் இளம்பெண்ணை சிதைத்தது புனே மாவட்டம் சிக்ராப்பூரை சேர்ந்த 36 வயதான ராம்தாஸ் காடே என்பது தெரிந்தது. சிசிடிவியில் உள்ள அடையாளங்களை வைத்து அவனை தேடும் முயற்சியில் தனிப்படை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட ஆந்திரப் பெண் பொறியாளர்: குற்றவாளிக்கு தூக்கு தண்டனையை ரத்து செய்த உச்ச நீதிமன்றம்; "என் மகளை கொன்றது யார்?" தந்தை ஆவேசம்