தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் தேசியக் கல்விக்கொள்கையில் மும்மொழிக் கொள்கை விவகாரம் சூடுபிடித்து தீவிரமாகச் செல்கிறது. மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு ஏற்காததால் சமக்ர சிக்ஸான் அபியான் திட்டத்தில் முழுமையான நிதியை மத்திய அரசு தமிழக அரசுக்கு விடுவிக்காமல் இருந்து வருகிறது.

மும்மொழிக் கொள்கை மூலம் இந்தி மொழியைத் திணிக்க மத்திய அரசு முயல்வதாக தமிழக அரசு குற்றம்சாட்டுகிறது. இதனால் மும்மொழிப் பிரச்சினை மத்திய அரசுக்கும், தமிழக அரசுக்கும் தீவிரமாக இருந்து வருகிறது.
இதையும் படிங்க: எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு..!

இந்நிலையில் மாநிலங்களவையில் எம்.பி. இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி அளித்த பேட்டியில் “ஒருவர் பல மொழிகளைக் கற்க முடியும் என்பதை எப்போதுமே நான் நம்புகிறேன். எனக்கு 7 முதல் 8 மொழிகள் தெரியும். ஆதலால் நான் எப்போதுமே குழந்தைகள் கற்பதை பார்த்து மகிழ்ச்சியடைவேன்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம் பேசுகையில் “தமிழகம் இரு மொழிக் கொள்கையுடன் வலுவாக, சிறப்பாக இருக்கிறது. அதாவது ஆங்கிலம், தமிழ் மொழிகள் சிறப்பாக செயல்படும்போது, 3வது மொழி கட்டாயம் என்பது முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. உலக வர்த்தகம், அறிவியலில் ஆங்கிலம் நம்மை இணைக்கிறது, தமிழ் மொழி நமது கலாச்சாரம், அடையாளத்தை பாதுகாக்கிறது. 3வது மொழியை யாரேனும் கற்க விரும்பினால் அவர்களின் சொந்த விருப்பம். ஆனால் அதை கட்டாயமாக்க எந்தக் காரணமும் இல்லை. 3வது மொழி என்பது முழுமையாக ஏற்கக்கூடியது அல்ல, மத்திய அ ரசு தனது கொள்கைகளை அமல்படுத்துவதில் நெகிழ்வுத்தன்மை வேண்டும்” எனத் தெரிவித்தார்.

காங்கிரஸ் எம்.பி. ஜெபி மதார் கூறுகையில் “மொழி விவகாரம் என்பது உணர்வுப்பூர்வமானது, மனிதர்கள் உணர்ச்சிகளோடு தொடர்புடையது ஆதலால் பாஜக இதை உணர வேண்டும். மக்களின் உணர்வுகளை பாதிக்கும என்த விஷயத்தையும் ஊக்குவிக்கக்கூடாது. தர்மேந்திர பிரதான் தேவையின்றி சமூகத்தில் பிளவுகளை உருவாக்குகிறார். எதிர்க்கட்சிகள் ஒன்றுபட்டு நிற்கிறோம், அதனால்தான் நேற்று நாடாளுமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்தோம். தேசியக் கல்விக்கொள்கையில் பாஜகவுக்கு மறைமுக ஆதாயங்கள் உள்ளன” எனத் தெரிவித்தார்
இதையும் படிங்க: திமுக கூட்டணியில் வைகோவுக்கு மீண்டும் எம்.பி. பதவி..? வைகோ சொன்ன பளிச் பதில்..!