புதுச்சேரியில் பாமக சிறப்பு பொதுக்குழுவில் ராமதாஸ் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது
புதுச்சேரி பட்டானூரில் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது . தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பேசிய டாக்டர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணி தலைவராக முகுந்தன் என்பவரின் பெயரை அறிவித்தார் .
இதற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கடுமையான எதிர்ப்பை தெரிவிக்கவே கோபமடைந்த டாக்டர் ராமதாஸ் கையில் இருந்த மைக்கை மேஜை மீது தூக்கி எறிந்தார் .
இதையும் படிங்க: டேமேஜ் ஆன இமேஜ்... தாய்க்குலத்தின் காலில் விழுந்து கறையைத் துடைத்து கொண்ட எம்.எல்.ஏ..! அசர வைத்த அருள்..!
வந்து நான்கு மாதங்கள் கூட ஆகவில்லை அதற்குள் கட்சியில் இளைஞரணி பொறுப்பு எப்படி கொடுத்தீர்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார் அன்புமணி ராமதாஸ் அதற்கு மிகக் காட்டமாக பதில் அளித்த ராமதாஸ் , நான் சொல்றதுதான் கேட்கணும் கேட்கலனா யாரும் இந்த கட்சியில் இருக்க முடியாது என்று தெரிவித்தார்
மேடையிலேயே மகனும் தந்தையும் ஒருவருக்கொருவர் வார்த்தையால் மோதிக்கொண்டது கட்சி நிர்வாகிகள் இடையே பதற்றத்தை ஏற்படுத்தியது .
இதையும் படிங்க: 10.5% விட அதிகம் அனுபவிக்கும் வன்னியர்கள்... 15% ஆக உயர்த்தி திமுகவுக்கு நெருக்கடி... அன்புமணியை ஆட்டி வைக்கும் டேட்டா..!