மத்திய அரசின் துரோகங்களால் தமிழ்நாட்டு மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளனர் என்று திமுக அமைப்புச் செயலாளராக ஆர் எஸ் பாரதி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
தமிழ்நாட்டைத் தொடர்ந்து வஞ்சிக்கின்ற மத்திய அரசு இந்த வருட பட்ஜெட்டிலும் மிகப்பெரிய துரோகத்தை செய்திருக்கிறது. இதை பொதுமக்கள் மத்தியில் கொண்டு செல்ல மும்முனை போராட்டம் திமுக நடத்தியுள்ளது

யுஜிசி வரைவு அறிக்கையில் மாநில அரசுகளின் உரிமையை பறிக்கும் வகையில் மத்திய அரசு திருத்தங்களை செய்துள்ளது என்றும் இதனை திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வன்மையாகக் கண்டித்து கடிதம் எழுதியதோடு, நின்று விடாமல் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் பிப்ரவரி 6ஆம் தேதி டெல்லியில் மாணவர் அணி சார்பில் ஆர்ப்பாட்டத்தை நடத்துவோம். உத்தரவிட்டு அந்த ஆர்ப்பாட்டத்தையும் வெற்றிகரமாக நடத்தி முடித்தோம் என ஆர்.எஸ் பாரதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: செங்கோட்டையனை ரகசியமாக சந்தித்த அந்த முக்கியப்புள்ளி... பேரத்தைத் தொடங்கியதா டெல்லி..?
உத்தரப்பிரதேசம் பீகார் குஜராத் ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் அதிக நிதியை ஒதுக்குகின்றனர். தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் இந்த ஓரவஞ்சனை என ஆவேசமாக ஆர் எஸ் பாரதி கேள்வி எழுப்பினார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் நன்றாக நடிக்கிறார் தானும் ஒரு தமிழச்சி என்னும் சொல்லும் அவர் தமிழ்நாட்டிற்கு செய்தது என்ன? கொடுக்கும் பணத்தை கூட திருப்பித் தருவதற்கு அவர்களுக்கு யோக்கியதை இல்லையா?

புயல் வெள்ளத்தில் தமிழ்நாட்டில் ஏற்பட்ட பாதிப்பு அனைவருக்கும் தெரியும். சேர வேண்டிய நிதி, ஆசிரியர்கள் சம்பளம், 100 நாட்கள் வேலை திட்டத்திற்கான நிதி என எதையும் தர மறுக்கிறார். தமிழ்நாட்டை பழிவாங்க வேண்டும் அதற்கு காரணம். தமிழ்நாட்டில் புரட்சிகரமான திட்டங்களை உலகம் போற்றும் அளவில் செயல்படுத்துவது தான்.
காலை உணவு திட்டத்தை கனடாவில் இருப்பவர்கள் கூட பாராட்டுகின்றனர். தமிழ்நாட்டின் பெருமை உச்சத்துக்கு சென்றுள்ள நிலையில் மத்திய அரசால் தாங்கிக் கொள்ள முடியாமல் மோடி அரசு தமிழ்நாட்டை வஞ்சிக்கிறது என கடுமையாக சாடினார் ஆர் எஸ் பாரதி. மத்திய அரசின் இந்த தொடர் ஓரவஞ்சனைகளால் தமிழ்நாட்டு மக்கள் கடுமையான கோபத்திற்கு ஆளாகி இருப்பதாகவும் ஆர் எஸ் பாரதி தெரிவித்தார்.
இதையும் படிங்க: எடப்பாடியாருடன் மோதல்… செங்கோட்டையனுக்கு செம டிமாண்ட்: திமுக- தவெக இடையே கடும்போட்டி..!