இதன் மூலம் இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தனது பேட்டர் கார்கள் விற்பனை, சர்வீஸ் உள்ளிட்டவற்றை தடம்பதிக்க தயாராகிவிட்டது தெரியவருகிறது. டெஸ்லா நிறுவனத்தில் 13 வகையான பணிகளுக்கு குறிப்பாக வாடிக்கையாளர்கள் சேவை, விற்பனை, அலுவலகப் பணிகள் என விளம்பரங்களை லிங்க்ட் இன் பக்கத்தில் டெஸ்லா நிறுவனம் வெளியிட்டுள்ளது. கார் சர்வீஸ் தொழில்நுட்ப வல்லுநர், ஆலோசகர்கள், வாடிக்கையாளர் மேலாளர், டெலிவரி ஆப்ரேஷன் நிபுணர் உள்ளிட்ட 5 பொறுப்புகளுக்கு டெல்லி, மும்பையில் ஆள் கேட்டுள்ளது டெஸ்லா நிறுவனம்.

இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் பேட்டரி கார்களுக்கு சுங்கவரி விதிப்பு 110 சதவீதமாக இருந்ததால், டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனை செய்ய மறுத்துவிட்டது. ஆனால், சமீபத்தில் பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் மற்றும் டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்கை சந்தித்தபின், இறக்குமதி வரி 110 சதவீதத்தில் இருந்து 70 ஆகக் குறைக்கப்பட்டது.
இதையும் படிங்க: தமிழக பட்ஜெட் தேதியை அறிவித்த சபாநாயகர் அப்பாவு... தீயாய் களத்தில் இறங்கிய தங்கம் தென்னரசு...!
இருப்பினும் மின்னமு வாகனங்கள் விற்பனையில் சீனாதான் இந்தியாவைவிட முதலிடத்தில் இருக்கிறது. கடந்த ஆண்டு மட்டும சீனா 1.10 கோடி கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால், இந்தியாவில் ஒரு லட்சம் கார்கள் விற்பனையாகியுள்ளது. கடந்த வாரம் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் செய்திருந்தார். அந்தப் பயணத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க் ஆகியோரைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, அமெரிக்காவுக்கான வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும நோக்கில், அமெரி்க்காவில் இருந்து இந்தியாவின் இறக்குமதியை அதிகப்படுத்த பிரதமர் மோடி ஒப்புக்கொண்டார். எப்-35 ரக போர்விமானங்களை வாங்கவும், கச்சா எண்ணெய், எரிவாயு இறக்குமதியை அதிகப்படுத்தவும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
எலான் மஸ்கையும், அவரின் குடும்பத்தாரையும் பிரதமர் மோடி சந்தித்துவிட்டு திரும்பிய நிலையில் இந்தியாவில் டெஸ்லா நிறுவனம் தொடங்குவதற்கான பணிகளில் முன்னோட்டமாக ஆட்களை வேலைக்கு எடுக்கத் தொடங்கியுள்ளது.
இதையும் படிங்க: செங்கோட்டையன் மீது கை வைத்தால்... தலைமையில் மாற்றம் ஏற்படும்..! எடப்பாடியாருக்கு கே.சி.பழனிசாமி எச்சரிக்கை..!