வணிக வளாகக் கட்டடத்தில் வாடகைக்கு அலுவலகம் வைத்துள்ள அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமாரின் அலுவலகம் முன் மூன்று ஆண்டுகளாக வரிபாக்கி செலுத்தாத காரணத்தால் கட்டடத்தின் முன்பு குப்பைத்தொட்டியை ஊழியர்கள் வைத்துச் சென்றுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை, கேகே நகர் பகுதியில் இருக்கக்கூடிய வணிக கட்டடத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் வாடகைக்கு அலுவலகம் எடுத்து நடத்தி வருகிறார். இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளாக கட்டிடத்திற்கு வரிப்பாக்கி செலுத்தாததால் மாநகராட்சி அதிகாரிகள் அந்த கட்டிடத்தின் முன் குப்பைத் தொட்டியை வைத்து சென்றனர்.

தனியார் கல்லூரிக்கு எதிரே இருக்கக்கூடிய இந்த அலுவலகத்தில் ஆர்.பி.உதயகுமார் வாடகைக்கு அலுவலகம் எடுத்து நடத்தி வருகிறார். தனியார் கல்லூரி எதிரே அமைந்துள்ள இந்த கட்டிடத்திற்கு கடந்த 3 ஆண்டுகளாக மதுரை மாநகராட்சிக்கு வரிப்பாக்கி செலுத்தவில்லை எனக் கூறி மாநகராட்சி பணியாளர்களை நேற்று அந்த வணிக வளாகம் முன்பு வைத்து சென்றனர். இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: எடப்பாடியின் கோட்டை கனவு செங்கலை ஒவ்வொன்றாக உறுவும் செங்கோட்டையன்; மூவரை வாட்டி வதைக்கும் டெல்லி டென்ஷன்...!

கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் காலமாக முன்னாள் அமைச்சரும், திருமங்கலம் சட்டமன்ற உறுப்பினருமான ஆர்.பி. உதயகுமார் தனது கட்சி அலுவலகத்தை இந்தக் கட்டடத்தில்தான் நடத்தி வருகிறார். தனது கட்சி சார்ந்த நபர்களை ஆர்ர்.பி. உதயகுமார் இந்த அலுவலகத்தில் அழைத்து சந்திப்பதுதான் வழக்கம். இதன் அடிப்படையில் ஆர்.பி.உதயகுமார் இந்த கட்டத்தில் 30 ஆண்டுகளாக அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த கட்டடத்தை நடத்திவரும் அந்த வணிக வளாக உரிமையாளர் மாநகராட்சிக்கு வரிப்பாக்கி செலுத்தாததால் மாநகராட்சி ஊழியர்கள் அந்த கட்டிடத்திற்கு முன்பு குப்பைத் தொட்டியை வைத்து சென்றுள்ளனர்.

எப்போதும் பரபரப்பாக இருக்கக்கூடிய அந்த கே.கே.நகர் சாலையில் தனியார் கல்லூரி மட்டுமல்ல, மாட்டுத்தாவணி உள்ளிட்ட பல்வேறு முக்கிய பகுதிகளுக்கு செல்லக்கூடிய வாகனங்கள் செல்லக்கூடிய பகுதி. மக்கள் பரபரப்பாக இருக்கக்கூடிய பகுதி. முன்னாள் அமைச்சருடைய கட்சி அலுவலகம் இயங்கக்கூடிய அந்த கட்டிடத்திற்கு முன் மாநகராட்சி பணியாளர்கள் குப்பைத் தொட்டியை வைத்து சென்றது பெரும் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
இதையும் படிங்க: இடுப்பு கிள்ளிகள்..! மேடையில் பாஜக: பெண் போலீசாரிடம் திமுக.. விஜய்க்காக அதிமுக-விலிருந்து ஆத்திரக்குரல்