2025-2026ம் ஆண்டிற்கான தமிழ்நாடு நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்துள்ளார்.

இன்றைய தினம் தமிழ்நாடு அரசின் பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பொறுப்பேற்றதில் இருந்தே வேளாண்மைக்கு என தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அதன் படி நாளை வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ளது. வேளாண் பட்ஜெட்டை எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்யவுள்ளார். அதன் தொடர்ச்சியாக பட்ஜெட் மீதான விவாதம் மார்ச் 17ம் தேதி முதல் 21ம் தேதி வரை பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் பட்ஜெட் தொடர்பாக எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு, ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்கள் பதிலளிப்பார்கள்.

அதனையடுத்து மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும். அனைத்து துறை ரீதியாக அமைச்சர்கள் மானியக்கோரிக்கையை தாக்கல் செய்வார்கள், அப்போது எழுப்பப்படும் கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் பதில் அளிப்பார்கள். வரும் 24ம் தேதி மானியக்கோரிக்கை மீதான விவாதம் தொடங்கப்பட்டு முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது. ஏப்ரல் 30ம் தேதி உள்துறை மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை சார்பில் நடைபெற உள்ள மானியக்கோரிக்கை மீது முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தாய்குலத்தின் வாக்குகளைத் தட்டித்தூக்க திட்டமா?... பட்ஜெட்டில் மகளிருக்கு மாஸான அறிவிப்புகள் வெளியிட்ட தமிழக அரசு....!
இதையும் படிங்க: இனி இவர்களுக்கு மாதம் ரூ.2000 - தமிழக அரசு அதிரடி அறிவிப்பு...!