திருச்சி மாவட்டம் தொட்டியம் காட்டுப்புத்தூர் அருகே உள்ள கிடாரம் பகுதியில் புகழ்பெற்ற மதுரைவீரன் கோவில் அமைந்து உள்ளது. இக்கோயிலில் பூசாரி தனபால் என்பவர் கோயிலில் பூஜை செய்து வருகிறார். வழக்கம்போல் நேற்று பூஜைகள் முடித்து விட்டு இரவு கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதை நோட்டமிட்ட மர்ம நபர் ஒருவர் மதுரை வீரன் சாமியின் கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்றுள்ளார். கோவில் உண்டியலை உடைத்து அதிலிள்ள பணத்தை கொள்ளையடிக்க முயன்றதாக கூறப்படுகிறது. மேலும் மதுரை வீரன் சாமியின் கழுத்தில் பக்தர்கள் வேண்டுதலைக்காக போடப்பட்ட ரூபாய் மாலையையும் மர்ம நபர் திருடியுள்ளார்.

இந்நிலையில் கோயில் அருகே வசிக்கும் நபர் ஒருவர், கோயில் பகுதியில் மர்ம நபர் சுற்றி திரிவதை கவனித்துள்ளார். சிறுது நேரம் கழித்து அந்த மர்ம நபர் காணாமல் போன நிலையில் சந்தேகமடைந்த அவர், கோயில் அருகே வந்து பார்த்துள்ளார் அப்போது கோயில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். கோயிலின் உள்ள, மர்ம நபர் ஒருவர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை பார்த்துள்ளார். இதையடுத்து அவர் சத்தம் போட்டது அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை உதவிக்கு அழைத்துள்ளார்.
இதையும் படிங்க: போலீசுக்கு விழுந்த அடி! அரைநிர்வாணத்தில் போலீசுடன் தகராறு.. வழக்கறிஞர் கவுன்சில் தலைவர் அட்டூழியம்..


உடனே அங்கு திரண்ட கிராம மக்கள் மர்ம நபரை சுற்றி வளைத்து பிடித்துள்ளனர். மர்ம நபரை பிடித்து தர்ம அடி கொடுத்து மக்கள் கோவில் தூணில் கட்டிவைத்தனர். பின்பு கோவில் பூசாரி தனபாலுக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த பூசாரி, திருடன் குறித்து காட்டுப்புத்தூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காட்டுப்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சங்கர், பொதுமக்களிடமிருந்து மர்ம நபரை மீட்டு விசாரணை மேற்கொண்டார்.

போலீசார் மேற்கொண்ட விசாரணையில் கோவிலில் திருடியது காட்டு புத்தூர் அருகே உள்ள ஆலம்பாளையம் புத்தூரை சேர்ந்த சின்னசாமி மகன் சொக்கன் என்கின்ற சொக்கலிங்கம் என தெரிய வந்தது. 35 வயதான சொக்கலிங்கம் மீது மீது காட்டுப்புத்தூர் காவல் நிலையத்தில் ஏற்கனவே ஆறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. மேலும் பிடிபட்ட சொக்கன் பல்வேறு கோவில்களில் மட்டும் தனது திருட்டு வேலையை காட்டி வந்துள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து போலீசார் சொக்கனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இதையும் படிங்க: நாட்டிலேயே மிக உயரமான தங்க கோபுரம்... கோலாகலமாக நடந்த கும்பாபிஷேகம்..!