ஆடு மேய்த்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இருவர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாவட்டம் முசிறி அருகே 11வயது சிறுமி ஆடு மேய்க்க சென்றுக் கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த சின்னத்தம்பி(70), மதன்குமார்(19), மதன் (30) ஆகியோர் வந்துள்ளனர். இவர்களின் சின்னத்தம்பியும், மதன்குமாரும் சிறுமி கட்டாயப்படுத்தி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

இதனை மதன் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்து மற்றவர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார். சிறுமியின் வன்கொடுமை வீடியோவை மதனின் செல்போனில் இருந்து மற்றவர்கள் பார்த்து ரசித்துள்ளனர். இது குறித்து அறிந்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய், கடந்த ஜனவரி மாதம் முறிசி அனைத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதையும் படிங்க: கேம்ப்ளிங்கில் 50 லட்சம் லாஸ்... அதுக்காக குழந்தைகள் என்ன பாவம் பண்ணாங்க.. நெஞ்சை உலுக்கிய நாமக்கல் சம்பவம்..!

அதன்பேசில் சிறுமியிடம் விசாரித்த போலீசார் அந்த மூன்று பேரையும் அடையாளம் கண்டு போக்சோ வழக்கில் கைது செய்தனர். இதையடுத்து 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்த நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வநாகரத்தினம் உத்தரவின் பேரில் சின்னத்தம்பி, மதன்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்தார்.
இதன்பேரில் சின்னதம்பி, மதன்குமார் ஆகியோர் மீது குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசினால் வழங்கப்படும் நிவாரண தொகை வழங்கவும், காவல்துறை சார்பில் பரிந்துக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தந்தையை இரும்பு ராடால் அடித்த மகன்... துடிதுடித்து இறந்ததை வீடியோ எடுத்து ரசித்த கொடூரம்!!