உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேர முயல்வது, ரஷ்யாவிற்கு எதிரானதாகக் கருதப்படுவது, மற்றும் உக்ரைனின் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள பிரிவினைவாதிகளுக்கு ஆதரவு அளிப்பது போன்ற காரணங்களால் உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் உருவானது. ரஷ்யாவின் இரண்டு நிபந்தனைகளை உக்ரைன் ஏற்றுக்கொண்ட போதிலும் மூன்றாவது நிபந்தனையை ஏற்பதில் சிக்கல் நிலவுகிறது.

உக்ரைன் - ரஷ்யா போர் பதற்றம் கீரணி மக்களை சொந்த இடங்களிலேயே புலம்பெயர வைத்துள்ளது. எத்தனையோ உயிரிழப்புகள், எத்தனையோ பாதிப்புகள் ஏற்பட்ட போதிலும் போர் பதற்றம் தணியாமல் இருந்தது. ரஷ்யாவுக்கு எதிராக ஐநா மன்றத்தில் அமெரிக்காவும் ஐரோப்பிய நாடுகளும் ஒரு தீர்மானத்தைக் கொண்டுவந்தன. அப்போது, இந்தியா நடுநிலை விகிப்பதாக அறிவித்தது., வாக்கெடுப்பைப் புறக்கணித்தது. பிரச்சினையை இரு நாடுகளும் சமாதானமாகப் பேசித் தீர்த்துக்கொள்ள வேண்டும், அதற்கு கண்டனத் தீர்மானம் உதவாது என்பதுதான் இந்தியாவின் நிலைப்பாடாக உள்ளது.
இதையும் படிங்க: உக்ரைன் போர் நிறுத்தம்: 12 மணி நேரம் நீடித்த அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை: ரஷ்யாவின் முடிவு இதுதான்..!

உக்ரைன் போர்நிறுத்தம் தொடர்பாக ரஷ்யா மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர்கள் தலைமையிலான அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும், அதிகாரிகள் இந்த விவகாரம் தொடர்பாக மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது 30 நாள் இடைக்கால போர் நிறுத்தத்திற்கு உக்ரைன் ஒப்புதல் அளித்தது.

இந்த நிலையில், இஸ்ரேல் உடனான போரை தற்காலிகமாக நிறுத்துவதற்கு ஹமாஸ் தெரிவித்துள்ளது. மேலும், ஐந்து பணயக் கைதிகளை விடுவிப்பதாகவும், 50 நாட்கள் போர் நிறுத்தம் அமலில் இருக்கும் என்றும் ஹமாஸ் கூறி இருக்கிறது. இது தொடர்பான செய்திக்குறிப்பில், ஹமாஸ் ஆரம்ப போர் நிறுத்த ஒப்பந்தத்தின் விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடித்துள்ளது என்றும், இஸ்ரேல் இந்த திட்டத்தைத் தடுக்காது என்றம் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்தியஸ்தர்களிடமிருந்து பெறப்பட்ட திட்டத்தைத் தொடர்ந்து, பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு தொடர் ஆலோசனை நடத்தினார். இதன் பிறகு, இஸ்ரேல் தனது எதிர் திட்டத்தை அமெரிக்காவுடன் முழு ஒருங்கிணைப்புடன் மத்தியஸ்தர்களுக்கு வழங்கியுள்ளது என்று இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: #BIGBREAKING: வழிக்கு வந்த புடின்..! மோடிக்கு நன்றி.. முடிவுக்கு வருகிறது உக்ரைன் போர்..