தலித் மக்கள் தாக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உச்ச நீதிமன்றம் தீர்ப்பின் அடிப்படையில் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கோரி, கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் 3 ம் தேதி சென்னை அண்ணா சாலை, அண்ணா சிலை அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மத்திய அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

அந்த கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் எஸ்.எஸ்.பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்த போரட்டத்திற்கு காவல்துறை அனுமதி வழங்கவில்லை. அனுமதியின்றி நடைபெற்ற போரட்டத்தில் கட்சியினர், சாலை மறியல் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: திமுகவை போல திருமா நடத்தும் தனியார் பள்ளி… அண்ணே நீங்களுமா..? அண்ணாமலை அதிர்ச்சி..!
இதுதொடர்பாக, திருப்போரூர் தொகுதி எம்.எல்.ஏ. பாலாஜி மற்றும் செல்லதுரை, செல்வம், அப்துல் ரகுமான், ஜெகன், வெங்கடேசன் ஆகிய 6 பேர் மீது அனுமதியின்றி கூடுதல், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், வன்முறையை தூண்டுதல் உள்ளிட்ட பிரிவுகள் கீழ் சென்னை திருவல்லிக்கேணி போலீசார் இரு வழக்குகளை பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்குகளை விசாரித்த சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எம்.பி, எம்.எல்.ஏக்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி ஜெயவேல், காவல் துறையினர் சாட்டியுள்ள குற்றச்சாட்டுக்கள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி எம்.எல்.ஏ. பாலாஜி உள்பட ஆறு பேரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.
இதையும் படிங்க: எங்க பொறுமையைச் சோதிக்காதீங்க.. மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு திருமாவளவன் எச்சரிக்கை.!