120 மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகள் உள்ளிட்ட பலரையும் அறிவிக்க உள்ளதாக தவெக அறிவித்த நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் பட்டியல் வெளியானது. அதில் 19 மாவட்ட நிர்வாகிகள் பெயர்கள் வெளியானது. விஜய் நேரடியாக 19 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து அவர்களிடம் பல கேள்விகளை வைத்து பின்னர் அறிவித்தார்.

இதில் மீதமுள்ள நிர்வாகிகளை விஜய் சந்தித்தப்பின் அந்த பட்டியல் வெளியாகும் என்கிற நிலையில் இரண்டு நாட்கள் விஜய் சந்திக்கவில்லை. இந்நிலையில் திங்கட்கிழமை மீண்டும் விஜய் நிர்வாகிகளை சந்திக்க உள்ளார். முதல் நாள் சந்திப்பில் புஸ்ஸி ஆனந்த், வெங்கட்ராமன் உள்ளிட்ட நிர்வாகிகளை வெளியில் நிறுத்திவிட்டு தனியாக நிர்வாகிகளை சந்தித்தது பரபரப்பானது.
இதையும் படிங்க: ஆளுநர் தேநீர் விருந்து விஜய்யும் புறக்கணித்தார் - அழைப்பு விடுத்தும் ஏற்கவில்லை

திடீரென விஜய் நிர்வாகிகளை சந்தித்ததால் நிர்வாகிகளால் திடீரென பேசுவதற்கு தயக்கம் காரணமாக முழுமையான தகவல்களை விஜய்யிடம் சொல்ல முடியவில்லை என்கிறார்கள். இந்நிலையில் இரண்டாவது சந்திப்புக்கு வரும் நிர்வாகிகள் தயார் நிலையில் வருவதாகவும், மாவட்ட பிரச்சனை தொடங்கி கட்சிக்குள் உள்ள பிரச்சனைகள், புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி குறித்த விஷயங்கள் என பலதையும் சொல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய்யிடம் நேர்க்காணலுக்கு வருபவர்கள் தயாராக வருவார்களா? இவர்கள் அனைவரையும் தேர்வு செய்தது புஸ்ஸி ஆனந்த் மட்டுமே என்பதால் அவர்கள் புஸ்ஸி ஆனந்த பற்றியோ, ஜான் பற்றியோ சொல்வார்களா என்கிற கேள்வியும் வைக்கப்படுகிறது. இதையும் விஜய் பரிசீலிப்பாரா? என்கிற கேள்வியும் வைக்கப்படுகிறது.

நிர்வாகிகளிடம் விஜய் ஆலோசனை நடத்தும்போது அவர்களிடம் அதையும் மீறி யாராவது சொல்லிவிடுவார்களோ என்கிற பதைபதைப்பு மாநில நிர்வாகிகளிடம் இருக்கும். ஆனால் அதெற்கெல்லாம் கவலைப்பட வேண்டாம், இது சம்பிரதாயமான ஒன்றுதான் விஜய் சீரியசாக எடுத்துக்கொள்ள மாட்டார், அதனால் கவலைப்பட வேண்டாம் என அவர்களே மனதுக்குள் தேற்றிக்கொள்ளும் அளவுக்குத்தான் அந்த சந்திப்பும் இருக்கும் என்கிறார்கள்.

ஆனால் தூத்துக்குடி மாவட்ட பெண் நிர்வாகி ஆக்னஸ் போன்றவர்கள் விஜய்யிடம் நேரடியாக மாநில நிர்வாகிகள் மீது உள்ள குறைகளை, குறிப்பாக புஸ்ஸி ஆனந்த், ஜான் ஆரோக்கியசாமி பற்றி குறைகளை அதிகம் சொல்ல வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆனால் 2 ஆடியோக்கள் வந்து இரண்டு வாரம் ஆகியும் எந்தவித அசைவும் இல்லை. ஒருவேளை இது தவெகவுக்கு எதிரான சதியாக இருந்தால் அதுகுறித்தும் ஒன்றும் ரியாக்ஷன் இல்லை. அதனால் நிர்வாகிகள் என்னதான் புகார் பட்டியல் வாசித்தாலும் ஒன்றும் ஆகாது என நம்பிக்கையுடன் இருப்பதாக சொல்கிறார்கள். திங்கட்கிழமை சந்தித்தப்பின் 20 க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்களை அறிவிக்கிறார். செவ்வாய்க்கிழமை சந்திப்பு இல்லை, மீண்டும் புதன்கிழமை சந்திக்க வாய்ப்புண்டு.