நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் வக்பு திருத்த சட்ட மசோதா நிறைவேறியது. இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கினார். இதையடுத்து இச்சட்டம் அமலுக்கு வந்துவிட்டது.
இந்நிலையில் வக்பு திருத்த சட்டத்தை மேற்கு வங்கத்தில் அமல்படுத்த மாட்டோம் என்று அம்மாநில முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.

தலைநகர் கொல்கத்தாவில் ஜெயின் சமூகத்தினரின் நிகழ்ச்சி ஒன்றில் மம்தா பானர்ஜி பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில் மம்தா பேசுகையில்," சிறுபான்மையின மக்களையும், அவர்களின் சொத்துக்களையும் நான் பாதுகாப்பேன். வக்பு திருத்த சட்டம் இயற்றப்பட்டதால் நீங்கள் (இஸ்லாமியர்கள்) வருத்தப்படுகிறீர்கள் என்று எனக்குத் தெரியும். நீங்கள் நம்பிக்கையுடன் இருங்கள்.ந்மேற்கு வங்கத்தில் பிரித்தாளும் சூழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஆனால், அதை செய்ய நாங்கள் விட மாட்டோம். வக்பு திருத்த சட்டத்தை இங்கு அமல்படுத்த மாட்டோம்." என்று முதல்வர் மம்தா பானர்ஜி கூறினார்.

வக்பு திருத்த மசோதாவை எதிர்த்து தமிழ்நாடு, கேரள மாநில அரசுகள் ஏற்கனவே சட்டமன்றங்களில் தீர்மானம் நிறைவேற்றின. தற்போது மேற்கு வங்க மாநில அரசு இச்சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்துள்ள நிலையில், தமிழ்நாடு, கேரள மாநில அரசுகளும் மேற்கு வங்கத்தைப் பின்பற்றுமா என்று கேள்வி எழுந்துள்ளது.
இதையும் படிங்க: முப்பது ஆண்டுகள் ஆட்சியில் இருப்போம் என்கிறார் அமித் ஷா.. எங்கள் வாரிசுகள் உங்கள் சட்டங்களை தூக்கி எறிவார்கள்... திருமா ஆவேசம்!
இதையும் படிங்க: வக்பு சட்டம் எதிர்ப்பு.. திமுக அரசிடம் கற்றுக்கோங்க.. காஷ்மீர் அரசுக்கு முப்தி மெகபூபா கொட்டு!