குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கைது செய்வது குறித்த நோட்டீஸ்களை அனுப்புவதற்கு வாட்ஸ் அப் போன்ற மின்னணு சாதனங்களை பயன்படுத்தக்கூடாது என்று காவல்துறைக்கு உச்சநீதிமன்ற உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.
குற்ற நடைமுறைகள் சட்டம் (சிஆர்பிசி) 1973/பி என் எஸ் எஸ் ஆகியவற்றின் கீழ் பரிந்துரைக்கப்பட்ட சேவை முறைகள் மூலம் மட்டுமே வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு கைது தொடர்பான நோட்டீஸ்களை அனுப்ப வேண்டும் என்றும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் அனுப்பிய அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
நீதிபதிகள் எம் எம் சுந்தரேஷ் மற்றும் ராஜேஷ் பிண்டல் ஆகியோர் அடங்கிய உச்ச நீதிமன்றம் அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்து உள்ளது.
இதையும் படிங்க: அண்ணா பல்கலைக் கழக மாணவி பாலியல் பலாத்காரம்... அதிகாரிகளிடம் இருந்து ரூ.25லட்சம் வசூலித்து கொடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு..!
மூத்த வழக்குரைஞர் சித்தார்த் லூத்ரா மற்றும் நீதிமன்ற நட்பு அழைப்பாளரான (அமிக்கஸ்கியூரி) ஆகியோரின் பரிந்துரையை ஏற்று நீதிபதிகள் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்து உள்ளனர்.

உச்ச நீதிமன்ற வழக்கு விசாரணை ஒன்றில் வாதாடிய சித்தார்த் லூத்ரா இது பற்றி கூறுகையில், குறிப்பிட்ட இந்த சட்டப் பிரிவுகள் அடிப்படையில் வாட்ஸ் அப் மூலம் வழக்கு ஒன்றில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விசாரணை அதிகாரிகளுக்கு முன் ஆஜராகவில்லை. மேலும் அத்தகைய தவறு செய்த அதிகாரிகள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' என்று புகார் கூறியிருந்தார்.
மேலும் அரியானா மாநில தலைமை போலீஸ் அதிகாரி (டிஜிபி) வாட்ஸ் அப் மூலம் அனுப்புவது பற்றி பிறப்பித்த நிலையான உத்தரவு குறித்தும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு அவர் கொண்டு வந்தார்.
வாட்ஸ் அப் அல்லது மற்ற மின்னணு சாதனங்கள்மூலம் வழங்கப்படும் நோட்டீஸ்கள் 41 ஏ பிரிவினில் முறையான சேவையாக கருதப்படாது என்ற டெல்லி உயர் நீதிமன்றத்தின் கருத்தை நிறை நிறுத்தி வழங்கப்பட்ட தீர்ப்பையும் இந்த விவாதத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

பி என் எஸ் எஸ் 2023 பிரிவு 532 பற்றியும் அப்போது அவர் குறிப்பிட்டார். அதில் அனைத்து சோதனைகள் விசாரணைகள் மற்றும் நடவடிக்கைகள் மின்னணு முறையில் மின்னணு தகவல் தொடர்பு அல்லது ஆடியோ வீடியோ எலக்ட்ரானிக் வழிமுறைகளை பயன்படுத்துவதன் மூலம் நடத்தப்படலாம். ஆனால் பிரிவு 35 கீழ் அறிவிப்பை அனுமதிக்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியது குறிப்பிடத்தக்கது.
இந்த விவாதத்திற்கு பிறகு வாட்ஸ் அப் மூலம் கைது பற்றிய நோட்டீசை அனுப்பக் கூடாது என்ற உத்தரவு உச்ச நீதிமன்ற நீதிபதிகளால் பிறப்பிக்கப்பட்டது.
இதையும் படிங்க: "திருமணத்துக்கு மறுப்பு தெரிவிப்பதை தற்கொலைக்கு தூண்டுவதாகக் கருத முடியாது" ! உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு