தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மத்தியில் போதைப்பொருள் பழக்கமானது அதிகரித்து வருவதனால் அதனை கட்டுப்படுத்துவதற்கு போலீசார் நடவடிக்கைகளை தீவிர படுத்தியுள்ளனர். அதன்படி நகர் பகுதிகளிலும் புறநகர் பகுதிகளிலும் அவபோது போலீசார் ரோந்து பணியிலும் வாகன தணிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் நெல்லை மாவட்டம் மூலக்கரைப்பட்டி அடுத்த சின்ன மூலக்கரை பகுதியைச் சேர்ந்த உதயகுமார் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

புகாரின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், இளைஞர்கள் மத்தியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட உதயகுமாரை போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். தொடர்ந்து நாங்குநேரி குற்ற பிரிவு ஆய்வாளர் ராஜகுமாரி, உதயகுமார் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பிக்கு வேண்டுகோள் விடுத்தார். அதனை முன் முன்னிறுத்தி மாவட்ட எஸ்பி சிலம்பரசன் பரிந்துரையின்படி, மாவட்ட ஆட்சியர் சுகுமார் உத்தரவின் பேரில் உதயகுமாரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்திய இளைஞர்கள்.. அதிரடியாக கைது செய்த போலீசார்..
இதையும் படிங்க: தலை தூக்கிய கந்துவட்டி பிரச்சனை.. சூசனமான முறையில் கேட் போட்ட போலீஸ்..!