குடியரசு தினத்தை முன்னிட்டு பத்ம விருதுகளை ஜனாதிபதி திரௌபதி முர்மு அறிவித்திருக்கிறார்.
இந்த விருதை பெற்றவர்களில், கோவா மாநிலத்தைச் சேர்ந்த 100 வயதான பெண்மணி லிபியா லோபோ என்பவர் நாட்டு மக்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து இருக்கிறார்.
ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் இருந்து கடந்த 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 14ஆம் தேதி இந்தியா விடுதலை பெற்றது. ஆனால் இந்தியாவில் பிரெஞ்சு ஆதிக்கத்தில் இருந்த பாண்டிச்சேரி, போர்த்துக்கீசியரின் ஆதிக்கத்தில் இருந்த கோவா போன்ற பகுதிகள் அதன் பிறகு ஒவ்வொன்றாய் சுதந்திரம் பெற்றன.
இதையும் படிங்க: களை கட்டுகிறது புத்தாண்டு கொண்டாட்டம்: மும்பை - கோவா நெடுஞ்சாலையில், கடும் போக்குவரத்து நெரிசல்!
1961 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி அன்று கோவா விடுதலை பெற்றது. கோவா சுதந்திரபோராட்டத்தில் தீவிரமாக பங்கேற்ற லிபியா லோபோ நூறு வயது ஆனாலும் நல்ல உடல் நலத்துடன் ஆரோக்கியமாக இருந்து வருகிறார்.
ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த இவருடைய கணவர் பெயர், வாமன் சர் தேசாய். இவர் ஏற்கனவே காலமாகிவிட்டார்.
பத்மஸ்ரீ விருது பெற்ற தகவல் அறிந்ததும், அவருடைய வீட்டிற்கு சென்று இருந்த "இந்தியன் எக்ஸ்பிரஸ்" செய்தியாளரிடம் "நாட்டினன் உயரிய பத்ம விருது கிடைத்திருக்கும் இந்த நாள் மிகவும் மகிழ்ச்சியானது.
கோவா விடுதலை அடைந்த நாளில் எத்தகைய மகிழ்ச்சியில் திளைத்தேனோ அதே மகிழ்ச்சியில் இன்றும் நான் திளைக்கிறேன்". என்று மிகவும் பெருமிதத்துடன் குறிப்பிட்டார். "இதுபோன்ற தருணங்கள் ஒருவருடைய வாழ்க்கையில் மிகவும் அரிதானது; இந்த விருது எனக்கு பெரும் ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்துள்ளது. இதை நான் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை; அல்லது இப்படிப்பட்ட விருதுக்காக நான் ஆசைப்படவில்லை" என்று தெரிவித்த அவருக்கு கடந்த ஆண்டு மே 25ஆம் தேதி அன்று, 99 வயது முடிவடைந்து 100 வயதில் காலடி எடுத்து வைத்தார்.

தனது விடுதலைப் போராட்டத்திற்காக காடுகளில் தலைமறைவாக இருந்து௦ வானொலி ஒளிபரப்பை ரகசியமாக இவர் கணவருடன் சேர்ந்து நடத்தி வந்தது குறிப்பிடத்தக்கது.
போர்த்துக்கீசியர்களின் சர்வாதிகாரத்தின் கீழ் கோவாவில் அனைத்து சிவில் உரிமைகளும் இடைநிறுத்தப்பட்டதன் பின்னணியில், தங்களுடைய ரகசிய வானொலி மூலம் பிரச்சாரம் மற்றும் ஒளிபரப்பு செய்திகள், நாடாளுமன்றத்தில் இந்திய தலைவர்களின் உரைகள் மற்றும் தேசியவாத இயக்கம் பற்றிய போராட்டங்களை அவர்கள் முன்னெடுத்து வந்தனர்.
1961 ஆம் ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி மத்திய பாதுகாப்பு அமைச்சரான வி கே கிருஷ்ணமேனனின் நேரடி செய்தி ஒன்றே இந்த வானொலி தான் போர்த்துக்கீசிய கவர்னர் ஜெனரலுக்கு அனுப்பி வைத்தது. "தேவையற்ற உயிரிழப்புகளை தடுப்பதற்காக சரணடையுமாறு" அந்த வானொலி செய்தியில் அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
'லிபி'என்று செல்லமாக அழைக்கப்படும் லிபியா, மாலையில் நண்பர்கள் மற்றும் அறிமுகம் ஆனவர்களிடமிருந்து தொடர்ந்து அழைப்புகள் வரத் தொடங்கிய போதுதான் தனக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டு இருப்பது பற்றிதெரிந்து கொண்டதாக இந்த பேட்டியின் போது கூறியிருந்தார்.

"இந்த தகவலை நான் இன்னும் பார்க்கவில்லை திடீரென அனைவரும் என்னை அழைக்க ஆரம்பித்தனர். எனது தொலைபேசியில் வாழ்த்து செய்திகள் குவிந்த வண்ணம் இருந்தன. அனைவருக்கும் வாட்ஸ் அப்பில் பதில் அளித்து ஆசீர்வாதம் வழங்கி வருகிறேன். இந்த விருது மற்றவர்களுக்கு முன் உதாரணமாகவும் அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும்இருக்கும் என்று நம்புகிறேன்" என்றும் அவர் தெரிவித்தார்.
இரண்டாம் உலகப்போரின் போது இவர் தணிக்கை மற்றும் மொழி பெயர்ப்பாளராக பணியாற்றி வந்தார் இத்தாலிய போர் கைதிகளால் மறைமுக எழுத்துக்களால் எழுதப்பட்ட ரகசிய கடிதங்களை புரிந்து கொள்ளும் ஆற்றல் அவருக்கு இருந்தது. பின்னர் அவர் பம்பாயில் உள்ள அகில இந்திய வானொலியில் ஸ்டெனோகிராபராக வேலைக்கு சேர்ந்தார். பின்னர் அதைத் தொடர்ந்து அங்கு அவர் நூலக நூலகராகவும் பணிபுரிந்தார். பின்னர் சட்டக் கல்லூரியில் படிக்கும் நாட்களில் கோவா தேசிய இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.
விடுதலைக்குப் பின்பு ஒரு வழக்குரைஞராக நீதிமன்றங்களின் திவ்யா வாதாடி வந்தார்.
மகளிர் கூட்டுறவு வங்கி ஒன்றையும் அவர் நிறுவினார். கோவாவின் முதல் சுற்றுலாத்துறை இயக்குனராக பதவி வகுத்தவரும் லிபியாதான். மாநிலத்தின் சுற்றுலாத் துறையை வடிவமைப்பதில் முக்கிய பங்கு ஆற்றினார். அவருடைய கணவர் மறைந்த மாமனார் சர் தேசாயும் ஏற்கனவே பத்மஸ்ரீ விருது பெற்றவர் ஆவார்.
அது பற்றி குறிப்பிட்ட லிபியா "தற்போது எங்கள் இருவருக்கும் பத்மஸ்ரீ விருது கிடைத்திருப்பது மிகவும் ஆச்சரியமானது. இடையில் பெரிய இடைவெளி இருந்தாலும் 90களில் முற்பகுதியில் அவருக்கு அது கிடைத்தது என்று பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.
"தாமதமாக வந்ததாக கருதுகிறீர்களா? என்று செய்தியாளர் கேட்டபோது இல்லை, இல்லை;{ இது முற்றிலும் எதிர்பாராதது கிடைக்க வேண்டிய எதையும் நீங்கள் தடுக்க முடியாது என்று முத்தாய்ப்பாக பதில் அளித்து பேட்டியை முடித்து வைத்தார் லிபியா."
இதையும் படிங்க: சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமதிக்கும் திமுக அரசு ..கடம்பூர் செ.ராஜூ தாக்கு ..!