சென்னை விருகம்பாக்கம் கணபதி ராஜ் நகர் மெயின் ரோடு பகுதியிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசுவதாக அக்கம்பக்கத்தினர் விருகம்பாக்கம் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் உடனடியாக போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்றனர். வீட்டின் முன்பக்கத்தில் பயங்கரமாக துர்நாற்றம் வீசியது.
அதே சமயம் வீட்டின் முன்பக்க கதவு பூட்டியிருந்தது. ஆனால் பின்பக்க கதவு திறந்திருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். எனவே முன்பக்கத்தை விடுத்து, பின் பக்கத்தின் வழியாக போலீசார் உள்ளே சென்றனர். உள்ளே சென்று பார்த்தபோது அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது.

அந்தச் சடலத்தின் தலைக்குள் அரிவாள் ஒன்று இருந்தது. பின்னர் தலையில் பதிந்த அரிவாளோடு அந்தச் சடலத்தை மீட்ட போலீசார். பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் கொலை செய்யப்பட்டவர் யார் என்று விசாரணை துவங்கியது. போலீஸ் விசாரணையில் அவரின் பெயர், வெங்கடேசன் (வயது 43) என்றும் ஆதம்பாக்கம் பிருந்தாவன் நகரைச் சேர்ந்தவர் என்றும் தெரிந்தது. வக்கீலானா இவர் நடிகர் கருணாஸின், முக்குலத்தோர் புலிப்படை கட்சியில் மாநில துணை செயலாளராக இருந்தவர் என்பதும் தெரிந்தது.
இதையும் படிங்க: என்மீது பாசம் இல்லையா? தாய் பார்க்க வரவில்லை என சோகம்.. விமான பணிப்பெண் விபரீத முடிவு..!

கொலையுண்ட வெங்கடேசனின் உடல் முழுவதும் கத்துக்குத்து காயங்கள் இருந்தன. அவரை கொலையாளிகள் சித்ரவதை செய்து கொடூரமாக வெட்டி கொலை செய்து இருப்பது தெரிந்தது. அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெங்கடேஷன் கடந்த சில மாதங்களா அவரின் நண்பர் கார்த்திக் வீட்டில் தங்கியிருந்துள்ளார்.
தனது நண்பரான சேதுபதி என்பவருடன் சேர்ந்து வக்கீல் அலுவலகம் நடத்தி வந்து உள்ளார். கடந்த மாதம் மர்ம கும்பலால் நெல்லையில் சேதுபதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக வெங்கடேசன் கொலை செய்யப்பட்டாரா என்கிற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே வெங்கடேசன் குடியிருந்த வீட்டிற்கு சொந்தக்காரரான, நண்பர் கார்த்திக்கைக் காணவில்லை. அதனால் அவரிடம் விசாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள். அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில், 2 நாட்களுக்கு முன்னதாக 4 பேர் கொண்ட கும்பல், வெங்கடேசனின் வீட்டில் இருந்து தப்பிச் சென்றது தெரிந்தது. இதையடுத்து அந்த கும்பல் யார் என்றும் போலீசார் விசாரணையை துவங்கினர்.

இதுகுறித்து விருகம்பாக்கம் போலீஸார் கூறுகையில், கொலை செய்யப்பட்ட வழக்கறிஞர் வெங்கடேசனின் தலையை அரிவாளால் வெட்டியிருக்கிறார்கள். தலையில் ஆழமாக வெட்டு விழுந்திருக்கிறது.அந்த அரிவாளை வெளியில் எடுக்க முடியாததால் அப்படியே விட்டுவிட்டுச் சென்றிருக்கிறார்கள். இறந்து கிடந்த இடம் முழுவதும் ரத்தம் உறைந்து கிடந்தது.
மேலும் அவர் கொலை செய்யப்பட்டு சில தினங்கள் ஆனதால் அவரின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டது. அவர் அணிந்திருந்த தங்க நகைகள் எதுவும் கொள்ளைப் போகவில்லை. வெங்கடேசனின் நண்பர் கார்த்திக் மீது எங்களுக்குச் சந்தேகம் உள்ளது. அவரைப் பிடித்து விசாரித்தால்தான் சில தகவல்கள் தெரியவரும் என்றனர்.

இதையடுத்து கார்த்த்கின் செல்போன் எண் சிக்னலை கொண்டு போலீசார் வலைவீசி தேடி வந்தனர். நெல்லை, நாங்குநேரி பகுதிகளில் தனிப்படை போலீசார் வலைவீசி தேடினர். இறுதியில் நாங்குநேரில் வைத்து கார்த்திக், ரவி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். கார்த்திக் சரித்திர பதிவேடு குற்றவாளி என்பதும், அவர் மீது ஏற்கனவே 27 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும்நிலப்பிரச்சனை தொடர்பாக வெங்கடேசனுக்கும் மற்றொரு தரப்பிற்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்ததாக தெரிகிறது. அதில் கிடைத்த பணத்தை பங்கு பிரிப்பது குறித்து வெங்கடேசனின் அலுவலகத்தில் வைத்து பேச்சுவார்த்தை நடந்து உள்ளது. இதில் ஏற்பட்ட தகராறில் கொலை நடந்து இருக்கலாம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: மீண்டும் சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்... இந்த முறை ஐபிஎல் காரணம் இல்லை... வேறு என்ன?