சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்சலைட்டுகள் ஆதிக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் 20 ஆண்டுகளுக்கு மேலாக தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது. குறிப்பாக சுக்மா பிஜப்பூர் மற்றும் பஸ்டர் மாவட்டங்களில் அதிக அளவில் நக்சலைட்டுகள் காடுகளில் பதுங்கி உள்ளனர்.
வழக்கம்போல துணை ராணுவ பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தனர். நக்சலைட்டுகள் காட்டில் ஒரு பகுதியில் குழுமி உள்ளதாக மத்திய பாதுகாப்பு படைக்கு தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் நேற்று சனிக்கிழமை முதல் இன்று காலை ஞாயிற்றுக்கிழமை வரை பாதுகாப்பு படையினர் காடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை காலை இந்திராவதி தேசிய பூங்கா பகுதியிலுள்ள ஒரு அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பாதுகாப்பு படையினர் மற்றும் பணிவாளர்கள் கூட்டுப் படையினர் என அனைவரும் சேர்ந்து நக்சலைட் தேடுதல் நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டனர். அடர்ந்த காட்டின் உள்பகுதியில் நக்சல்கள் இருக்கும் இடத்தை கண்ட பாதுகாப்பு படையினர் துப்பாக்கிகளால் சுட தொடங்கினர். நக்சல்கள் பகுதியிலிருந்தும் தொடர்ந்து ஏகே ரக துப்பாக்கிகளில் இருந்து வந்த குண்டுகள் பாதுகாப்பு படையினர் பகுதிக்குகுள் வந்து விழுந்தன.
இதையும் படிங்க: ரஷ்யாவுடனான நட்பு... உள்நாட்டு உற்பத்தி… உலகையே மிரட்டும் இந்தியாவின் நவீன ராணுவம்..!
பிஜப்பூர் காட்டுப்பகுதியில் நடைபெற்ற இந்த தேடுதல் வேட்டையின்போது சுமார் 31 நக்சலைட்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பாதுகாப்பு பணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பல மணி நேர துப்பாக்கிச் சண்டைக்கு பிறகு நக்சலைட்டுக்கள் குழுமியிருந்த இடத்திலிருந்து ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டு அவை பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன துப்பாக்கிச் சண்டை நிறைவுற்றும் தற்போதும் தொடர்ந்து தேடுதல் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கொல்லப்பட்ட இரண்டு பாதுகாப்பு படையினரில் ஒருவர் மாநில காவல் துறையின் மாவட்ட ரிசர்வ் காவல் படையைச் சேர்ந்தவர் ஆவார் மற்றொருவர் சிறப்பு பணி படையைச் சேர்ந்தவர் என்றும் அங்கு பணியில் இருந்த மூத்த காவல்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பஸ்டர் மாவட்ட ஐஜி சுந்தர்ராஜ் கூறுகையில் பிஜப்பூர் மாவட்டத்தின் தேசிய பூங்கா பகுதியில் உள்ள காடுகளில் பாதுகாப்பு படையினர் பல நாட்களாக தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருவதாகவும் இன்று நடந்த மோதலில் 31 நக்சலைட்டுகள் கொல்லப்பட்டதையும் உறுதி செய்தார்.
துணை ராணுவத்தினர் உடனான சண்டையில் உயிரிழந்த அனைத்து நக்சலைட்டுகளின் உடல்களும் மீட்கப்பட்டுள்ளன அவர்களை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் பஸ்தர் காவல் துறை ஐஜி தெரிவித்தார்.

என்கவுண்டர் நடந்த இடத்திலிருந்து ஏராளமான ஏகே 47, எஸ்எல்ஆர், இன்சாஸ் ரைஃபில்கள்,33 பிஜிஎல் லாஞ்சர் ஆயுதங்கள் மற்றும் மிக மோசமான ஆபத்தை விளைவிக்கும் வெடிப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. இரண்டு துணை இராணுவத்தினர் உயிரெழுந்துள்ள நிலையில் காயமடைந்த பாதுகாப்பு படையினர் அனைவரும் நன்றாக இருப்பதாகவும் சிறந்த சிகிச்சைக்காக மாநில தலைநகர் மருத்துவ மையத்திற்கு மாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தேடுதல் வேட்டையில் உள்ள பாதுகாப்பு படையினருக்கு ஆதரவாக கூடுதல் படைகள் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் பிஜப்பூர் இந்திராவதி வனப்பகுதி முழுவதும் சல்லடை போட்டு நக்சலைட்களை தேடி வரும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதையும் படிங்க: ராணுவ தினம்: இந்திய ராணுவத்தில் இத்தனை பெண்களா..? நர்ஸ் முதல் கர்னல் வரை செம கெத்து..!