சென்னை, பூந்தமல்லி அடுத்த வயலா நல்லூர் பகுதியில் செங்கல் சூளை ஒன்று செயல்பட்டு வருகிறாது. இங்கு வட மாநிலத் தொழிலாளர்கள் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட சட்ட உதவி மையத்தின் செயலாளர் நளினி தேவிக்கு புகார் வந்துள்ளது. இதனை அடுத்து வந்த புகாரின் அடிப்படையில் நேற்று நேரடியாக வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் உடன் சென்று செங்கல் சூளையில் நளினி தேவி ஆய்வு செய்தார். அப்போது ஒடிசா மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் அந்த செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த 48 பேரை மீட்கப்பட்டனர். அவர்கள் பாரிவாக்கத்தில் உள்ள சமுதாய நல மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு வைத்து அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். அப்போது கடந்த ஜனவரி மாதம் ஒரு நபருக்கு ரூ.35 ஆயிரம் வீதம் கொடுத்து செங்கல் சூளையில் பணி புரிய அனுப்பியதாகவும், இங்கு வந்த பிறகுதான் கொத்தடிமைகளாக அவர்கள் நடத்தப்பட்டது தெரியவந்ததாகும் கூறினர்.
இதையும் படிங்க: அடுத்தடுத்து செயின் பறிப்பு.. என்கவுன்டரில் மாஸ் காட்டிய போலீஸ்.. காவல் ஆணையர் விளக்கம்..!

மேலும் இங்கு வந்த பிறகு வாரம் ரூ.200 மட்டும் சம்பளமாக கொடுக்கப்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து மீட்கப்பட்ட 48 பேரும் அவர்களது சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். அது மட்டுமின்றி அவர்களது வங்கி கணக்கில் அரசு சார்பில் ஒருவருக்கு தலா முப்பதாயிரம் ரூபாய் வீதம் செலுத்துவதற்கான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து வடமாநில தொழிலாளர்களை கொத்தடிமைகளாக நடத்திய செங்கல் சூளை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக பணிபுரிந்த வட மாநில தொழிலாளர்கள் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த பகுதியில் இது போல் வேறு ஏதேனும் சம்பவங்கள் நடந்து வருகிறதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: நள்ளிரவில் பரபரப்பு..! பல இடங்களில் செயின் பறிப்பு.. தப்ப முயன்ற கொள்ளையனை என்கவுன்ட்டர் செய்த போலீஸ்..!