வங்கக் கடலில் கொல்கத்தாவுக்கும் புவனேஸ்வரத்திற்கும் இடையே இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.1 ஆக பதிவான இந்த அதிர்வு கொல்கத்தா மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளிலும் உணரப்பட்டது.
இன்று காலை 6.10 மணிக்கு நில நடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் அறிவித்து இருக்கிறது. ஒடிசாவின் பூரி அருகே இது பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
வங்காள விரிகுடாவில் 91 கிலோ மீட்டர் தூரத்தில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் அட்சரேகை 19.52 N மற்றும் தீர்க்க ரேகை 88.55 E - ல் பதிவானதாக அவர் கூறினார். கொல்கத்தாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் மக்களிடையே சிறிது நேரம் பீதியை ஏற்படுத்திய போதிலும் சேதம் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் உடனடியாக எதுவும் தெரியவில்லை.
இதையும் படிங்க: 3 பெண்கள் மரண வழக்கில் திடீர் திருப்பம் : 'சித்தப்பாவே கொன்றதாக' சிறுவன் வாக்குமூலம்..!!

நில நடுக்கம் பற்றிய தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்வதற்காக சிலர் சமூக ஊடகங்களை பயன்படுத்தினார்கள். அதிகாலையில் தங்களுக்கு ஏற்பட்ட திடீர் அதிர்வுகளை பற்றி அதில் அவர்கள் குறிப்பிட்டு இருந்தனர்.
பயனர்கள் நிலநடுக்கம் குறித்து விவாதித்து மற்றவர்களின் பாதுகாப்பை சரி பார்த்தல் அது தொடர்பான ஹேஸ் டேக்குகள் ட்ரெண்ட் செய்யப்பட்டன. எக்ஸ் வலைதள பதிவர் ஒருவர் "பூகம்ப எச்சரிக்கை! கொல்கத்தாவில் காலை 6 மணி அளவில் கூகுளின் பூகம்ப எச்சரிக்கையை பெற்றார். ஒடிசாவில் இருந்து 175 கிலோ மீட்டர் தொலைவில் மையப் பகுதி இருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. வேறு யாராவது நிலநடுக்கத்தை உணர்ந்தார்களா? அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கிறேன். எச்சரிக்கையாக இருங்கள்; பாதுகாப்பாக இருங்கள்" என்று பதிவிட்டிருந்தார்.

கொல்கத்தாவில் நிலநடுக்கம் 5.3 ரிக்டர் அளவு... விழித்திருப்பதால் இதை என்னால் உணர முடிந்தது. உணர்ந்ததை பதிவிட்டேன் என்று மற்றொருவர் எழுதி இருக்கிறார்.
ஒடிசாவின் பூரி அருகே வங்காள விரிகுடாவில் பதிவான இந்த நிலநடுக்க மையப்பகுதி கடலுக்குள் இருந்ததால் அதன் தாக்கம் மிக குறைவானது என்று ஒடிசா வருவாய் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
ஒடிசாவின் பூரி பெர்காம்பூர் பாலசோர் மற்றும் புவனேஸ்வர் உள்ளிட்ட பல இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. கடந்த பிப்ரவரி 15ஆம் தேதி அதிகாலையில் டெல்லியில் நிலநடுக்கம் ஏற்பட்டது நினைவிருகலாம்.
கடந்த ஜனவரி எட்டாம் தேதி திபெத்தின் தொலைதூரப் பகுதி மற்றும் நேபாளத்தின் சில பகுதிகளை தாக்கிய வலுவான நில நடுக்கத்தை தொடர்ந்து கொல்கத்தாவிலும் லேசான நடுக்கம் இன்று உணரப்பட்டது. வடக்கு வங்காளத்திலும் இதன் அதிர்வு உணரப்பட்டது. ஆனால் எந்த சேதமும் ஏற்படவில்லை.
இதையும் படிங்க: கொல்கத்தாவை கலக்கடிக்கும் குடும்ப தற்கொலை? மணிக்கட்டை அறுத்துக்கொண்டு பெண்கள் மரணம்.. ஆக்சிடெண்டில் சிக்கிய ஆண்கள்..!