கடந்த திங்கள்கிழமை ஒரு சேனலுக்கு பேட்டியளித்த சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ அபு ஆஸ்மி பேட்டியளித்திருந்தார் அதில் “ அவுரங்கசீப் இந்தியாவின் தங்கப் பறவை. அவரின் ஆட்சியின்போது இந்தியாவின் ஜிடிபி 24% வளர்ச்சி அடைந்தது வரலாற்றில் அவுரங்கசீப் குறித்து பொய்யான வண்ணம் பூசப்பட்டுள்ளது. அவுரங்கசீப் பல கோயில்களை கட்டியுள்ளார், கொடூரமான அரசராக அவுரங்கசீப்பை நான் நம்பவில்லை. அதிகாரத்துக்காகவும், சொத்துக்காகவும்தான் அவுரங்கசீப் சண்டையிட்டார் மதத்தாக இல்லை என வரலாற்று அறிஞர் தெரிவித்தார் ” எனத் தெரிவித்திருந்தார்.

அபு ஆஸ்மியின் இந்த பேச்சுக்கு சிவசேனா கட்சி சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு, போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அவர் மீது மரைன் ட்ரைவ் போலீஸார் பல்வேறு பிரிவுகளில் முதல்தகவல் அறிக்கை பதிவு செய்தனர். இந்நிலையில் அபு ஆஸ்மியின் பேச்சு சட்டப்பேரவையின் மாண்பைக் குலைக்கும் வகையில் இருப்பதாகக் கூறி, இடைநீக்கம் செய்யும் தீர்மானத்தை இன்று கொண்டு வந்தார். இதையடுத்து, அபு ஆஸ்மியை கூட்டத்தொடர் முடியும்வரை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.
இதையும் படிங்க: முகலாய அரசர் அவுரங்கசீப்பை புகழ்ந்த எம்எல்ஏ அபு ஆஸ்மி சஸ்பெண்ட்... மகாராஷ்டிரா சபாநாயகர் நடவடிக்கை..!
இதனிடையே உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தும், அபு ஆஸ்மியின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் முதல்வர் ஆதித்யநாத் இன்று பேசுகையில் “ அவுரங்கசீப் குறித்து புகழ்ந்து பேசிய அந்த நபரை சமாஜ்வாதிக் கட்சி கட்சியிலிருந்து நீக்க வேண்டும், அவரை உத்தரப்பிரதேசத்துக்கு அனுப்பி வையுங்கள் நாங்கள் அவருக்கு நல்ல கவனிப்பு தருகிறோம்.

சத்ரபதி சிவாஜியின் பரம்பரை, பாரம்பரியத்தில் இருந்து வந்தது குறித்து அவமானப்படும் ஒரு நபர் அவுரங்கசீப்பை தனது மாடலாக எடுத்துக்கொள்ளும் நபர், இந்த நாட்டில் தொடர்ந்து தங்கியிருக்க உரிமை இருக்கிறதா இந்த கேள்விக்கு சமாஜ்வாதிக் கட்சி உடனடியாக பதில் அளி்க்க வேண்டும்” என்று ஆதித்யநாத் தெரிவித்தார்.
தன்னுடைய கருத்துக்கு கண்டனங்கள் வந்ததையடுத்து எம்எல்ஏ அபு ஆஸ்மி அளித்த விளக்கத்தில் “வரலாற்று அறிஞர்கள் சதீஸ் சந்திரா, ராஜீவ் தீக்சித், ராம் புண்ணியானி, மீனா பார்கவா, அவாத் ஓஜா உள்ளிட்டோர் அவுரங்கசீப் குறித்து நல்ல விதமாக எழுதியுள்ளனர். ஆனால், அவர்களை தடை செய்யவில்லை, விமர்சிக்கவில்லை. ஆனால், சத்திரபதி சிவாஜி மகராஜ், சாம்பாஜி மகராஜ், பாலசாகேப் அம்பேத்கர் போன்ற பெருந்தலைவர்கள் பற்றி என் கனவிலும் அவதூறன கருத்துக்களை தெரிவிக்கமாட்டேன். யாருடைய மனது பாதிக்கப்பட்டிருந்தால் என் கருத்துக்களை திரும்பப் பெறுகிறேன்” எனத் தெரிவித்தார்.

ஒரு புறம் கும்பமேளாவைக் குறைசொல்கிறீர்கள், மறுபுறம் அவுரங்கசீப்பை புனிதப்படுத்துகிறீர்கள். இந்தியாவின் நம்பிக்கையை குலைத்து, இந்துக் கோயில்களை இடித்த கொடூரமான ஆட்சியாளர். அபு ஆஸ்மி மீது நடவடிக்கை எடுக்க எது தடுக்கிறது. சமாஜ்வாதிக் கட்சி ஏன் அவரை நீக்க தயங்குகிறது. அவரை கட்சியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும்.
பொதுக்கூட்டத்தைக் கூடி அபு ஆஸ்மியிடம் ஏன் இப்படி பேசினார் என விளக்கம் கேளுங்கள் இல்லாவிட்டால் உ.பி.க்கு அனுப்புங்கள். இவர் போன்ற நபர்களை கையாள அதிககாலம் எடுக்கமாட்டோம். அவுரங்கசீப்பை ஏன் சமாஜ்வாதிக்கட்சி புகழ்கிறது, இது துரதிர்ஷ்டமானது. அவுரங்கசீப் தந்தை ஷாஜகான் தனது சுயசரிதையில், இதுபோன்ற கொடூரமான மகனை இனிமேல் யாரும் பெற்றெடுக்காதீர்கள் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பவுலிங்கில் அசத்திய குஜராத்... 105 ரன்களில் சுருண்ட உபி வாரியர்ஸ் அணி..!