சட்டமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி டங்சன் கனிம சுரங்கம் குறித்து எதிர்த்து பேசியதால் தான் டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு முடிவு கிடைத்தது அதற்கு அதிமுக தான் முழு காரணம் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார்.

மதுரை முத்துப்பட்டி 73 வது வார்டு பகுதியில் 13 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மையத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு திறந்து வைத்தார். இந்த நிகழ்வில் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்,எங்களைப் பொறுத்தவரை சாதாரண ஏழை எளிய மக்கள் பயனுள்ள வகையில் பட்ஜெட் அமைய வேண்டும். வக்புவாரிய மசோதா வரும் போது எடப்பாடி மறுபடிசீலனை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டார்.

இதையும் படிங்க: பெரியாரை மரியாதைக்குறைவாக பேசுபவர்களுக்கு மரியாதை கொடுக்க முடியாது.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்...
டங்ஸ்டன் கனிம சுரங்கம் வரும் வரை 9 மாதம் திமுக அரசு தூங்கியது.சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்க்ஷன் கனிமத்திற்கு எதிராக குரல் எழுப்பி பேசினார். மத்திய சுரங்கத் துறை அமைச்சரை அழைத்து வந்து அண்ணாமலை நாடகம் நடத்துகிறார். டங்ஸ்டன் கனிமத் திட்டம் வந்ததற்கு மத்திய மாநில அரசுகள் தான் முழு காரணம் மக்களை இந்த அளவிற்கு போராடம் வைத்தது தேவையா? பதட்டம் தேவையா? எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் கேள்வி கேட்ட பின்பு தான் டங்க்சன் கனிம சுரங்கத்திற்கு முடிவு கிடைத்தது. இதற்கு முழுமையான காரணம் அதிமுக தான்.
எழுதி வைத்துக் கொள்ளுங்கள் அதிமுக ஆட்சி 2026 இல் மலரும் அப்போது ஐந்து வயது சிறுமியிலிருந்து மூதாட்டி வரை பாதுகாக்கப்படுவார்கள் பாலியல் வன்கொடுமை இருக்காது என்றார்.
இதையும் படிங்க: திமுகவின் ஸ்டாலின் மாடல் ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி... எகிறி அடிக்கும் எடப்பாடி பழனிச்சாமி.!