ஸ்ரீ அமர்நாத் ஜி புனித வாரியம் சார்பில் ஜம்மு காஷ்மீர் கவர்னர் மனோஜ் சின்ஹா தலைமையில் ஆளுநர் மாளிகையில் நேற்று 48-வது கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தின் முடிவில் அமர்நாத் யாத்திரை தொடங்கும் தேதி முடிவானது.
இந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கும் யாத்திரை அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பகல்ஹாம் பாதை வழியாகவும், கந்தர்பால் மாவட்டத்தில் பல்தால் வழியாகவும் நடக்கும். இந்த யாத்திரை ஆகஸ்ட் 9ம் தேதி ரக்ஸா பந்தன் அன்று முடியும் என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஸ்ரீ அமர்நாத் கோயில் வாரிய உறுப்பினர்கள் பங்கேற்றனர். பக்தர்களுக்கு என்ன வசதிகள் செய்யலாம், சாலைப் பராமரிப்பு, மருத்துவ வசதிகள், தங்குமிட வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தினர். ஒவ்வொரு ஆண்டும் அமர்நாத் யாத்திரைக்கான மக்கள் கூட்டம் அதிகரித்து வரும்நிலையில் ஜம்மு, ஸ்ரீநகர் தவிர்த்து வேறு இடங்களில் பக்தர்கள் தங்குமிடங்களை அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: UNO-வில் எதிரொலித்த மணிப்பூர், காஷ்மீர் விவகாரம்.. ஆதாரமற்றது என இந்தியா பதிலடி..!
பக்தர்கள் யாத்திரைக்கு செல்லும் முன்பாக அடையாளங்கள் பெறுதல், கேஒய்சி ஆவணங்கள் பெறுதல், பதிவு செய்தல் போன்றவற்றையும் ஒழுங்குபடுத்துதல் வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. பக்தர்கள் வசதிக்காக நவ்காம் மற்றும் கத்ரா ரயில் நிலையங்களிலேயே அமர்நாத் யாத்திரைக்கான பதிவு செய்யும் வசதியை ஏற்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது.

பல்தால், பஹல்காம், நுன்வான், பதான் சவுக், ஸ்ரீநகர் ஆகிய இடங்களில் பக்தர்கள் தங்குவதற்கு இடம், வசதிகள் குறித்து ஆய்வு செய்ய குழுஅமைக்கப்பட்டது. அமர்நாத் செல்லும் பாதைகளில் தற்போது பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. அந்த பணிகளை மேற்பார்வையிடுதல், கண்காணித்தல், பக்தர்களுக்கு வசதிகளை ஏற்படுத்துதல் ஆ கியவற்ற கண்காணிக்கவும் சிறப்பு குழுவை அமைக்க முடிவு செய்யப்பட்டது. யாத்ரி நிவாஸ், பதான் சவுக், ஸ்ரீநகர் ஆகிய நகரங்களில் பக்தர்கள் தங்கும் வசதிகளை மேம்படுத்தவும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

அமர்நாத் செல்லும் இடங்களில் நடந்து வரும் திட்டங்கள், யாத்திரை தொடர்பான தகவல்கள், யாத்ரீகர்களுக்கான காப்பீடு, கட்டண சேவை வழங்குவோர், ஆன்லைன் வசதிகளை அதிகப்படுத்துதல், யாத்திரை செல்லும் பகுதிகளை தொடர்ச்சியாக பராமரித்தல் குறித்தும் கூட்டத்தில் பேசப்பட்டது.
அமர்நாத் குகையில் பக்தர்கள் கூட்டம் சேராமல் இருக்கவும், நெருக்கடியைத் தவிர்க்கவும், பேரிடர் மேலாண்மை குழுக்களை தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது. போதுமான அளவுஹெலிகாப்டர் சேவை, மருத்துவ ஹெலிகாப்டர் ஆம்புலஸ், காலநிலை குறித்து அறியும் தகவல் மையம் ஏற்படுத்துதல், பக்தர்களுக்கு பாதுகாப்பு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இதையும் படிங்க: வரலாறு படைத்த 10 வயது ஜம்மு காஷ்மீர் சிறுமி.. எப்1 அகாடெமிக்கு தேர்வாகிய ஆசியாவில் முதல் பெண்..!