கிரிமினல் வழக்கில் ஆஜர் ஆகாததால், 'யோகா குரு' பாபா ராம்தேவ் மற்றும் பதஞ்சலி ஆயுர்வேத நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் இணை நிறுவனருமான ஆச்சாரியா பாலகிருஷ்ணா ஆகியோருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவின் கீழ் கைது உத்தரவு (பிடி வாரண்ட்) பிறப்பித்து கேரள மாநிலம் பாலக்காடு மாவட்ட நீதிமன்றம் இந்த அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
ஏற்கனவே ஜாமீனில் வரக்கூடிய பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டு இருந்தும், அவர்கள் ஆஜர் ஆகாததால், பிப்ரவரி 15ஆம் தேதி அன்று அவர்கள் ஆஜராவதை உறுதி செய்வதற்காக ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் இந்த பிடிவாரண்ட் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்து உள்ளது. ஆங்கிலம் மற்றும் மலையாள செய்தி தாள்களில் தவறான மருத்துவ விளம்பரங்களை வெளியிட்டதற்காக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இருந்தது.
பதஞ்சலி தயாரிப்புகள் உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை குணப்படுத்தும் என்று கூறி தவறான விளம்பரங்களை வெளியிட்டு இருந்தது. இது மருந்துகள் மற்றும் மந்திரத் தீர்வுகள் (ஆட்சேபனைக்குரிய விளம்பரங்கள் சட்டம்) 1954-ஐ மீறுகிறது.
இதையும் படிங்க: ஆம் ஆத்மி தொண்டர்கள் மீது பாஜகவினர், போலீசார் தாக்குதல்: நடவடிக்கை கோரி, தேர்தல் ஆணையத்துக்கு கெஜ்ரிவால் கடிதம்
கேரளாவின் கோழிக்கோடு மற்றும் உத்தரகாண்டில் உள்ள அரித்துவார் நீதிமன்றங்களிலும் இதே போன்ற வழக்குகள் நடந்து வருகின்றன. அங்கு பலமுறை சமன் அனுப்பப்படும் ராம்தேவ் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில் மட்டும் கோழிக்கோட்டில் நாலு வழக்குகளும், பாலக்காட்டில் மூன்று, எர்ணாகுளத்தில் இரண்டு, திருவனந்தபுரத்தில் பத்து வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
முன்னதாக கடந்த ஜனவரி 15ஆம் தேதி அன்று தவறான மருத்துவ விளம்பரங்களுக்கு காரணமான தனிநபர்கள் மற்றும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்கினால் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் அவமதிப்பு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்று உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தொட முடியாத உயரத்தில் திமுக..! வெளியானது ஈரோடு கருத்துக்கணிப்பு