குடியுரிமை சட்டத் திருத்தச் சட்டம் கடந்த 2019, டிசம்பரில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இதன்படி, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்கப்படும்.

அதேசமயம் இந்த நாடுகளில் இருந்து 2014, டிசம்பர் 31ம் தேதிக்குள் இந்தியாவுக்கு வந்த இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிக்கள், கிறிஸ்தவர்கள் ஆகியோரிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும்.
இதையும் படிங்க: வனுவாட்டு தீவில் செட்டில்..! இந்தியக் குடியுரிமையை உதறி ‘எஸ்கேப்’பாகும் லலித்மோடி..!
இந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பி நாடுமுழுவதும் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடந்தன. கொரோனா பரவல் வந்ததையடுத்து போராட்டங்கள் வாபஸ் பெறப்பட்டன, இந்தச் சட்டத்தைப் பற்றி மத்திய அரசு மவுனம் காத்த நிலையில், கடந்த மார்ச் மாதம் 11-ம் தேதி இச்சட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இந்நிலையில் சிஏஏ சட்டத்தின் கீழ் 2 பேருக்கு அசாம் மாநிலத்தில் குடியுரிமை வழங்கப்பட்டுள்ளதாக அந்த மாநில அரசு தெரிவித்துள்ளது. அசாம் மாநிலத்தில் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நடந்து வருகிறது. முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தான் உள்துறை பொறுப்பையும் வைத்துள்ளார். சட்டப்பேரவையில் சட்டப்பேரவைத்துறை அமைச்சர் சந்திர மோகன் பட்வாரி கூறுகையில் “ அசாம் மாநிலத்தில் வாழ்ந்துவரும் வெவ்வேறு நாட்டினரிடம் இருந்து சிஏஏ சட்டத்தின் கீழ் குடியுரிமை கேட்டு 39 விண்ணப்பங்கள் வந்தன. இதில் 2 பேருக்கு மட்டும் குடியுரிமை வழங்ககப்பட்டுள்ளது, 18 பேரின் விண்ணப்பங்கள் பரிசீலனையில் இருக்கின்றன. 19 விண்ணப்பங்களுக்கு வழங்கப்படவில்லை, குறைபாடுகளை சரிசெய்து அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கலாம்.

முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா பேசுகையில் “ வங்கதேசத்தில் அரசியல் நிலையற்ற சூழல் காரணமாக இருந்து 156 பேர் அசாம் வழியாக சட்டவிரோதமாக 2021 முதல் 2024வரை வர முயன்றவர்கள் பிடிபட்டுள்ளனர். சட்டவிரோதமாக வந்தவர்கள் எண்ணிக்கை 51 லிரிருந்து 57ஆக அதிகரித்துள்ளது, கடந்த 2023ம் ஆண்டைவிட 2024ம் ஆண்டில் சட்டவிரோதமாக வருவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பலே கில்லாடி லலித் மோடி... இந்தியாவுக்கே பெப்பே காட்டி சொர்க்கத்தில் குடியேற்றம்..!