சமீபத்தில் டெல்லிக்குச் சென்று உள்துறை அமைச்சர் அமைச்சவை அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். இந்த சந்திப்பு பாஜக - அதிமுக இடையிலான கூட்டணியை உறுதிப்படுத்துவதாகவே தெரிந்தது.

இந்த சந்திப்பிற்கு பிறகு சமூக வலைதள பக்கத்தில் அமித்ஷா போட்டிருந்த பதிவும் கூட்டணியை உறுதி செய்வதாகவே இருந்தது. மீண்டும் அதிமுக - பாஜக இடையிலான கூட்டணி விவகாரம் அரசியல் பேசப் பொருளாக மாறி இருக்கும் நிலையில், பாஜகவுடன் கூட்டணி வைத்தால் அதிமுகவை தான் முதலில் பலவீனப்படுத்தும் என்று திருமாவளவன் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: “அதுக்கு 16 பேர் கொண்ட குழு இருக்கு”... அதிமுக கூட்டணி குறித்து எச்.ராஜா சொன்ன முக்கிய தகவல்...!

விசிக மகளிர் விடுதலை இயக்கத்தின் சார்பில் திருவண்ணாமலை மாவட்டம் தென்பள்ளிபட்டில் விசிக தேர்தல் அங்கீகார வெற்றி விழா நடைபெற்றது. இந்த விழாவில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கலந்து கொண்டார். விழாவில் கவுதம புத்தர், அம்பேத்கர், மீனாம்பாள், சாவித்திரி பாய் பூலே, ரமாபாய் ஆகியோரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

இந்த தேர்தல் அங்கீகார வெற்றி விழாவில் திருமாவளவன் பேசினார். அப்போது, திமுகவின் கூட்டணியை உடைப்பதற்காக சிலர் கூலி வாங்கிக் கொண்டு வேலை செய்து வருவதாகவும், அதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது என்றும் தெரிவித்தார்.

தமிழக அரசியலில் கூட்டணி கட்சிகளின் வெற்றிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி துருப்புச் சீட்டாக உள்ளது என்று தெரிவித்த திருமாவளவன், விசிகவிற்கு எத்தனை சீட்டுகள் கிடைக்கும்? ஆறு சீட்டு என்பது ஏழு அல்லது எட்டு ஆகுமா? என்று கேட்கிறார்கள்., 10 சீட்டு ஆனாலும் 20 சீட்டு ஆனாலும் நாங்கள் ஆட்சியைப் பிடிக்க போவதில்லை என்று தெரிவித்த திருமாவளவன், ஆனால் நாங்கள் இருக்கும் கூட்டணி ஆட்சி அமைப்பதற்கு விசிக வலுவான ஒரு சக்தி என்பதை வரும் தேர்தலிலும் உறுதிப்படுத்துவோம் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், தமிழ்நாட்டில் காலூன்ற நினைக்கும் பாஜக முதலில் அதிமுகவை தான் பலவீனப்படுத்த நினைக்கும் என்றும், தப்பி தவறிக்கூட பாஜகவுடன் கூட்டணி வைத்தால் எடப்பாடி பழனிச்சாமியின் கதை முடிந்து விடும் என்றும் எச்சரித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுகவுடன் பாஜக கூட்டணியா? அமித்ஷா டிவீட்டால் பரபரப்பு!!