2024 மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக பாஜகவுக்கு வந்த நன்கொடைகள் 87 சதவீதம் அதிகரித்து, ரூ.3ஆயிரத்து 967 கோடியாக உயர்ந்துள்ளன என்று அந்தக் கட்சியின் ஆண்டு தணிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23ஆம் ஆண்டில் பாஜகவுக்கு நன்கொடையாக ரூ.2,120 கோடி கிடைத்ததாக அந்தக் கட்சி தெரிவித்திருந்தது. 23-24ம் ஆண்டுக்குரிய தணிக்கை அறிக்கையை தேர்தல் ஆணையத்திடம் பாஜக அளித்திருந்தது. அந்த அறிக்கையை தேர்தல் ஆணையம் வெளியிட்டத்தில் இந்தத் தகவல் கிடைத்துள்ளது.

தேர்தல் நிதிப் பத்திரங்கள் வாயிலாக பாஜக 43 சதவீதம் பெற்றுள்ளது, அதாவது ரூ.1685.62 கோடி நன்கொடைகளைப் பெற்றுள்ளது. 2022-23ம்ஆண்டில் பாஜக தேர்தல் நிதிப் பத்திரங்கள் மூலம் ரூ.1,294.14 கோடி பெற்றிருந்தது, இது ஒட்டுமொத்த நன்கொடையில் 61% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மக்களவைத் தேர்தல் நேரத்தில் பிரசாரத்துக்கும், கட்சிக் கூட்டங்கள் நடத்தவும் ரூ.1,754.06 கோடி செலவிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது 2022-23ம் ஆண்டில் ரூ.1092.15 கோடி செலவிட்டதிருந்தது.
பாஜக கட்சி விளம்பரத்துக்காக மட்டும் ரூ.591.39 கோடி செலவு செய்துள்ளதாக தணிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரூ.196 கோடி போக்குவரத்து செலவுக்காகவும், ரூ.191 கோடி வேட்பாளர்களுக்கு நிதிஉதவிக்காகவும் செலவிட்டுள்ளதாக பாஜக தெரிவித்துள்ளது.

2024 மார்ச் 31ம் தேதி நிலவரப்படி பாஜகவிடம் ரூ.109.20 கோடி ரொக்கப்பணமும், ரூ.1627 கோடி வங்கி டெபாசிட்டிலும், ரூ.5377 கோடி வங்கி வைப்புத் தொகையிலும் இருப்பதாகத் தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சி நிலை என்ன
காங்கிரஸ் கட்சி 2023-24ம் ஆண்டில் வருமானமாக ரூ.1,225 கோடி பெற்றுள்ளது. இந்தக் கட்சியின் வருமானம் 2022-23ம் ஆண்டைவிட 170 சதவீதம் அதிகரித்துள்ளது, அந்த ஆண்டில் காங்கிரஸ் வருமானம் ரூ.452 கோடியாகத்தான் இருந்தது. தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாயிலாக காங்கிரஸ் கட்சி பெற்ற நன்கொடை அளவு 384 சதவீதம் அதிகரித்துள்ளது. 2022-23ம் ஆண்டில் தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாயிலாக ரூ.171 நன்கொடை பெற்ற காங்கிரஸ் கட்சி, 2023-24ம் ஆண்டில் ரூ.828 கோடி நன்கொடை பெற்றது.
இதையும் படிங்க: 'காங்கிரஸ் ஏன் தொடர்ந்து இந்துக்களை மட்டும் வெறுக்கிறது..?' கடுபேற்றிய கார்க்கே… கலங்கடிக்கும் பாஜக..!

2023-24ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியின் ஆண்டு செலவு ரூ.1025 கோடியாக இருந்ததாகத் தெரிவித்துள்ளது, இது 2022-23ம் ஆண்டில் ரூ.467 கோடியாகத்தான் இருந்தது. பாரத் ஜோடோ யாத்திரைக்காக காங்கிரஸ் கட்சி ரூ.50 கோடி செலவிட்டுள்ளது.
திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் வருமானம் 2023-24ம் ஆண்டில் ரூ.646 கோடியாக உயர்ந்துள்ளது, கடந்த 2022-23ம் ஆண்டில் ரூ.333 கோடியாக இருந்தது. தேர்தல் நிதிப்பத்திரங்கள் வாயிலாக 95 சதவீத வருமானத்தை திரிணமூல் காங்கிரஸ் பெற்றுள்ளது.
மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் நிதிப்பத்திரங்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம் தேர்தல் நிதிப்பத்திரங்கள் என்பது அரசியலமைப்புச்சட்டதுக்கே விரோதமானது, நன்கொடை அளித்தவர்கள் பெயர்களை வெளிப்படையாகத் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தது
இதையும் படிங்க: ஜாதி கட்சியா இது? - எல்.முருகன் முன்பே மல்லுக்கட்டிய பாஜகவினர் - நயினார் நாகேந்திரன் ஆதரவாளர்களால் அதகளம்!