மும்மொழி கொள்கையை ஏற்றால்தான் தமிழகத்திற்கு உரிய நிதியை விடுவிக்க முடியும் என்று மத்திய அரசு கூறியுள்ளது. தமிழக பள்ளிக் கல்வித் துறைக்கு விடுவிக்க வேண்டிய 2,152 கோடி ரூபாய் நிதியை விடுவிக்க மத்திய அரசு மறுத்துவருகிறது. மேலும், அரசியல் காரணங்களுக்காகவே அவர்கள் தேசிய கல்விக் கொள்கையை ஏற்க மறுக்கின்றனர், தமிழக மக்களின் நலன்களை அவர்கள் கவனத்தில் கொள்ளவில்லை, என்றும் குற்றம்சாட்டினர்.

ஆனால் தமிழகத்தில் மும்மொழி கொள்கையை ஏற்க முடியாது, பாஜக அரசு ஹிந்தி திணிப்பை செய்கிறது, தமிழகத்தின் இரு மொழிக் கொள்கையை தொடரும் என தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்.
இதையும் படிங்க: திமுக எம்.பி.க்கள் கூட்டம் - முப்பெரும் தீர்மானங்கள் நிறைவேற்றம்
மும்மொழி கொள்கைக்கு தமிழகத்தில் பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஹிந்தி திணிப்பிற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், திருப்பூரில் பாஜக சார்பில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டுள்ளது.

அதில் பிரதமர் மோடி அரசின் மும்மொழி கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிப்பை கண்டுபிடித்தால் 99 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.
மும்மொழி கற்க வேண்டியதன் அவசியம் குறித்து பாஜகவினர் கூறிவரும் நிலையில் இது தொடர்பாக கையெழுத்து இயக்கத்தையும் நடத்தி வருகின்றனர். பாஜக அரசுக்கும் தமிழகத்திற்கும் இடையே மொழிக் கொள்கையில் மோதல் போக்கு நிலவு வரும் நிலையில், ஹிந்தி திணிப்பு என்பது கிடையாது என பாஜகவினரும், ஹிந்தியை தான் பாஜக திணிக்கிறது., தமிழ் மொழியை புறக்கணிக்கிறார்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை தமிழகத்திலும் கூறி வருகின்றனர்.

மொழிக் கொள்கை பிரச்சனை வீரியம் எடுத்துள்ள நிலையில் திருப்பூரில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர் சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க: நாளை பார்லிமென்ட்., இன்று எம். பி.க்கள் கூட்டம்! முதல்வரின் புதிய ரூட்!