விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அப்பையநாயக்கன்பட்டி பகுதியில் செயல்பட்டு வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் சிக்கி 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பட்டாசு தயாரிக்கும் பணிக்காக வெடி மருந்துகளை கலந்த போது ரசாயனங்கள் ஒன்றுடன் ஒன்று உரசியதால் வெடி விபத்து நிகழ்ந்தது. இதனால் பட்டாசு ஆலையின் 4 அறைகள் இடிந்து தரைமட்டமாகின.

இந்த விபத்தில் சிக்கி 6 தொழிலாளர்கள் உடல் கருகி உயிரிழந்த நிலையில் 4 பேரின் சடலம் முதற்கட்டமாக மீட்கப்பட்டுள்ளது. இடிபாடுகளுக்கு இடையே சிக்கியுள்ள மேலும் 2 பேரின் சடலத்தை மீட்க தீயணைப்புத்துறையினர் முயன்று வருகின்றனர். மேலும் இடிபாடுகளுக்கு இடையே யாரேனும் சிக்கியுள்ளனரா? என தேடும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING சாத்தூர் அருகே பயங்கர வெடி விபத்து - 6 பேர் பலி!

இதனிடையே சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் காவல்துறையினர் விபத்து குறித்து விசாரணை நடத்தினர். அதனைத் தொடர்ந்து பட்டாசு ஆலை உரிமையாளர்கள் பாலாஜி, சசி பாலன், மேலாளர் தாஸ் பிரகாஷ் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக செயல்பட்டு உயிரிழப்பை ஏற்படுத்தியது, உரிய பாதுகாப்பின்றி பணியில் ஈடுபடுத்தியது உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறை 4 பேரையும் தேடி வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING சாத்தூர் அருகே பயங்கர வெடி விபத்து - 6 பேர் பலி!