புதுக்கோட்டை மாவட்டம் மண்டையூர் பகுதியை சேர்ந்தவர்கள் சித்திரகுமார் - ஜீவிதா தம்பதி. இவர்களுக்கு 18 வயதில் மணிகண்டன் என்ற மகனும், 16 வயதில் பவித்ரா என்ற மகளும் உள்ளனர். இந்நிலையில் பவித்ரா நேற்று முன்தினம் இரவு 11 மணி வரை செல்போனை பயன்படுத்தியுள்ளார். இதனை பெற்றோர் கண்டித்துள்ளனர். பிறகு மணிகண்டன் தன்னுடைய தங்கையை கண்டித்ததோடு செல்போனை அவரிடம் இருந்து பிடுங்கியுள்ளார். பெற்றோரும் பவித்ராவை கண்டித்த நிலையில் கோபத்தில் மணிகண்டன் தன் தங்கையின் செல்போனை கீழே போட்டு உடைத்தார்.

இதில் மனமுடைந்த பவித்ரா சோகமாக காணப்பட்டார். மறுநாள் தற்கொலை செய்துகொள்ளப் போவதாக கூறிக்கொண்டே அருகே உள்ள கிணற்றில் குதித்துள்ளார். தங்கையை காப்பாற்ற அண்ணன் மணிகண்டனும் கிணற்றில் குதித்த நிலையில், நீச்சல் தெரியாததால் இருவரும் கிணற்று நீரில் மூழ்கி இறந்தனர். சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தீயணைப்புத்துறையினர் இருவரின் உடலையும் சடலமாக மீட்டனர்.
இதையும் படிங்க: பாஜக ஆட்சிக்கு வந்த முதல்நாள் - அண்ணாமலை எடுத்த சபதம்...!

இதனையடுத்து, உயிரிழந்த இருவரின் சடலமும் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, பின்னர் அவர்களது சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: கிண்டி ரேஸ்கிளப் கோல்ப் மைதானத்தில் குளம்.. தடைகோரிய மனு தள்ளுபடி..