2024-25ம் நிதியாண்டில் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்காக மத்திய அ ரசு ரூ.86 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யதுள்ளது. ஆனால் பட்ஜெட்டுக்குப்பின் இடைப்பட்ட காலத்தில் கூடுதல் நிதியாக ஒதுக்கீடு செய்யப்பட்டு ஆண்டு இறுதியில் திருத்தப்பட்ட அறிக்கையாக மத்திய அரசு வெளியிடும். ஆனால், இந்த முறை 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு கூடுதலாக நிதி ஒதுக்கத் தேவையில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தி பைனான்சியல் எக்ஸ்பிரஸ் நாளேடு தெரிவித்துள்ளது. 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட ரூ.86 ஆயிரம் கோடி நிதி இந்த ஆண்டுக்கு போதும், 2024-25 நிதியாண்டிலேயே ரூ.7500 கோடி செலவிடப்படாமல் இருப்பதால் இது போதுமானதாக இருக்கும் என அதிகாரிகள்தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில் “ சில மாநில அரசுகள் 100 நாட்கள் திட்டத்துக்கு வழங்கப்பட்ட நிதியை, வேறுப்பணிகளுக்கு திருப்பிவிடுகின்றன, உண்மையில் இந்தத் திட்டத்தின் நிதி எதற்காக கிடைக்க வேண்டுமோ அதற்கு கிடைப்பதில்லை, தேவையானவர்களுக்கு வேலையும் கிடைப்பதில்லை. கொரோனா காலத்தில் மாநில அரசுகள் ரூ.1.10 கோடி வரை பெற்றன அப்போது கிராமப்புறங்கள் நிலை மோசமாக இருந்தது. ரூ.86ஆயிரம் கோடி என்பது இயல்பான காலத்தில் கிராமத்தின் தேவையைப் போக்க போதுமானதாக இருக்கும்” என தெரிவித்துள்ளது. 2024-25 நிதியாண்டில் இதுவரை மத்திய அரசு ரூ.82,684 கோடி நிதியை வழங்கியுள்ளது, ரூ.86 ஆயிரம் கோடியில் 96 சதவீத நிதி வழங்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பெயர்தான் 100 நாட்கள் வேலை! 44 நாட்கள்தான் வேலையாம்! நிதி ஒதுக்கீடும் அதிகரிக்கவில்லை

உண்மையில் ரூ.94 ஆயிரம் செலவிட வேண்டியிருக்கிறது முந்தைய நிதியாண்டில் மீதமிருந்த நிதியும் சேர்த்து செலவிடப்படுகிறது. 100 நாட்கள் வேலைத் திட்டத்துக்கு நிதியை தாமதமின்றி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமீபத்தில் கடிதம் எழுதி வலியுறுத்தியிருந்தார்.வரும் நிதியாண்டு பட்ஜெட்டிலும் 100 நாட்கள் வேலைத்திட்டத்துக்கு ரூ.86ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது, கடந்த இரு ஆண்டுகளில் ஒதுக்கப்பட்ட அதே அளவுதான் மத்திய அ ரசு ஒதுக்கியுள்ளது. குறிப்பிடத்தக்கது. கிராமங்களில் உள்ள மக்களுக்கு 100 நாட்கள் வேலைத் திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் சராசரியாக ஒருவருக்கு 44.62 நாட்கள்தான் 2024-25ம் ஆண்டில் வேலைதரப்பட்டுள்ளது.

இது 2023-24ம் ஆண்டில் 52 நாட்களாக இருந்தது என்று மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தில் உள்ள தொழிலாளர்கள் மற்றும் சமூகநலத்துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் இணைந்த அமைப்பான என்ஆர்இஜிஏ சங்கார்ஸ் மோர்ச்சா தெரிவித்துள்ளது. ஜனவரி 1-ம் தேதி நிலவரப்படி வேலையாட்களுக்கு ஊதியம் மட்டும் ரூ.9860 கோடி பற்றாக்குறை இருக்கிறது, இதில் ஊதிய நிலுவைத் தொகை மட்டும் ரூ.6,948.55 கோடியாகும். நடப்பு நிதியாண்டில் இன்னும் இரு மாதங்கள் முழுமையாக இருக்கும் நிலையில் இந்த திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 20சதவீதம் கடந்த கால நிலுவையை சரி செய்யப் பயன்படும். அப்படியிருக்கையில் 2025-26 நிதியாண்டுக்கான தொகை ரூ.70ஆயிரம் கோடிதான்.
இதையும் படிங்க: ரஷ்ய பீர் பாட்டிலில் மகாத்மா காந்தி படம் - கையெழுத்து.. இந்தியர்கள் அதிர்ச்சி!