ஆயிரம் விளக்கு பகுதியில் 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட உதவி ஆய்வாளர் ராஜாசிங் ஜாமீன் கோரியது குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை ஆயிரம் விளக்கு காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் ராயபுரத்தை சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரிடம் கடந்த ஆண்டு டிசம்பர் 11தேதி 20 லட்சம் ரூபாய் வழிப்பறி செய்ததாக காவல் உதவி ஆய்வாளர்கள் ராஜா சிங், சன்னிலாய்டு, வருமானவரித் துறை அதிகாரிகள் தாமோதரன் பிரதீப், பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையும் படிங்க: 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை.. அத்துமீறிய 56 வயது கோயில் பூசாரி..!!
ஜாமின் கோரி உதவி ஆய்வாளர் ராஜா சிங் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுவை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்திருந்தது.

இதனை எதிர்த்து உதவி ஆய்வாளர் ராஜாசிங் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மனு நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆஜரான காவல்துறை தரப்பு வழக்கறிஞர் மனு குறித்து பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் கோரினார். இதனையடுத்து, காவல்துறை பதில் மனுத்தாக்கல் செய்ய அவகாசம் அளித்த நீதிபதி வழக்கை பிப்ரவரி 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இதையும் படிங்க: சொத்து வாங்கியதை மறைத்த நீதிபதி..! கட்டாய ஓய்வு வழங்கியது செல்லும் - உயர்நீதிமன்றம்..!