அதிமுக பாஜக தோல்வி கூட்டணியே ஒரு ஊழல் தான் என்று திமுகவினுடைய தலைவரும் முதலமைச்சருமான முகா ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில் இரண்டு ரெய்டுகளுக்கு பயந்து அதிமுகாவை அடமானம் வைத்தவர்கள் தமிழ்நாட்டை அடமானம் வைக்க துடிக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். அதிமுக பாஜக கூட்டணி என்பது தோல்வி கூட்டணி, தொடர் தோல்வியை அந்த கூட்டணி கொடுத்தவர்கள் தமிழ்நாட்டு மக்கள் என்றும், இந்த தோல்வி கூட்டணியை மீண்டும் உருவாக்கி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமிஷா என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.

நேற்றைய தினம் சென்னை வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் அளித்த பேட்டி என்பது அவர் வகிக்கும் பதவிக்கு தகுதியானதாக இல்லை என்றும், அதிமுக பாஜக கூட்டணியை உறுதி செய்து கொள்வது அவர்கள் விருப்பம் சார்ந்தது. ஆனால் எதற்காக இந்த கூட்டணியை உருவாக்கினார்கள், எந்த கொள்கையின் அடிப்படையில் கூட்டணி சேர்ந்தார்கள் என்று சொல்லவில்லை. மாறாக குறைந்தபட்ச செயல் திட்டத்தை உருவாக்க போகுவதாக அவர்கள் உறுதி அளித்தார்கள். ஆனால் நீட் தேர்வு, இந்தி திணிப்பு, மும்மொழி கொள்கை, வக்பு வாரிய சட்ட திருத்தம் ஆகியவற்றை எதிர்ப்பாதாக கூறும் அதிமுக, தொகுதி மறு சீரமைப்பில் தமிழ்நாட்டுக்கான இடம் குறையக்கூடாது என்று வலியுறுத்தியதாக சொல்கிறது. அதிமுக இவை எல்லாம் இவர்களுடைய குறைந்தபட்சம் செயல் திட்டத்தில் இருக்கிறதா என்ற கேள்வியையும் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் எழுப்பி இருக்கிறார்.
இதையும் படிங்க: இது கொத்தடிமை கூடாரம்..! அதிமுக - பாஜக கூட்டணி குறித்து முதல்வர் டைரக்ட் அட்டாக்..!

மேலும் இதை எதைப் பற்றியும் உள்துறை அமைச்சர் பேசவில்லை. அதிமுக தலைமையையும் அவர் பேச அனுமதிக்கவில்லை. மாறாக திமுகவையும் திமுக அரசையும் என்னையும் விமர்சப்பதற்கு மட்டுமே அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பை பயன்படுத்தி இருக்கிறார் உள்துறை அமைச்சர் என்பதை அதனை பார்த்த மக்கள் அறிவார்கள். மாநில உரிமை, மொழியுரிமை, தமிழ் பண்பாடு ஆகியவற்றை காப்பதற்காக களத்து நிற்கும் இயக்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம் என்றும், ஆனால் அதிகார வெறியோடு அமைக்கப்பட்டிருக்கும் பாஜக - அதிமுக கூட்டணி என்பது இது அத்தனைக்கும் எதிரானது என்றும் சாடினார்.

பதவி மோகத்தில் தமிழ்நாட்டின் சுயமரியாதையை தமிழ்நாட்டின் உரிமையை டெல்லியிடம் அடமானம் வைத்து, தமிழ்நாட்டை பாழாக்கியவர் பழனிச்சாமி என்பதை யாரும் மறக்கவில்லை என்பதையும் அவர் குறிப்பிட்டிருக்கிறார். குறிப்பாக நீட் தேர்வு எதிர்ப்பு என்பது திசை திருப்புவதற்காக சொல்லப்படுகிறதாக மருத்துவ கல்வியை காப்பாதற்கு சொல்லப்படுவதாக உள்துறை அமைச்சர் அறிவார் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆகவே உள்துறை அமைச்சகத்தை கையில் வைத்திருக்கும் ஒரு அமைச்சர் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு என்று வாய்க்கு வந்தபடி பேசி இருப்பது கண்டனத்திற்குரியது எனக்கூறியுள்ளார்.

இது மணிப்பூர் அல்ல தமிழ்நாடு தான் என்பதை உள்துறை அமைச்சருக்கு நினைவூட்டுகிறேன் எனக்குறிப்பிட்டுள்ள ஸ்டாலின்ம் ஒன்றை ஆண்டுகளாக அங்கு படுகொலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது இந்த நிலையில் ஒரு கூட்டணி பேச்சு வார்த்தைக்கான விஷயங்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இன்றைய ஒரு சூழ்நிலையில் தமிழர்களது வளர்ச்சியை தடுக்க பல்வேறு சதி திட்டங்கள், தமிழ்நாட்டு உரிமையை பறிக்க தொகுதி மறுவரையறை என திட்டமிட்டு தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் சிதைத்து சீரழிக்க நினைக்கிறது பாஜக தலைமை.

அந்த நிலையில் தான் பழைய கொத்தடிமை கூடாரமான அதிமுகவின் தலைமையை மிரட்டி பணிய வைத்து, தன்னுடைய சதி திட்டங்களை பாஜக நிறைவேற்ற பார்க்கிறது. பாஜக தனியாக வந்தாலும் எவர் துணையோடு வந்தாலும் தமிழ்நாட்டு மக்கள் தக்க பாடம் புகட்டி பாடம் புகட்ட காத்திருப்பதாகவும், டெல்லிக்கு மண்டியிட்டு தமிழ்நாட்டை அடகு வைக்கும் துரோக கூட்டத்திற்கு தமிழ்நாட்டு மக்கள் தக்க விடையளிப்பார்கள் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நீட் தேர்வை பற்றி ஊடவளர்கள் திரும்ப திரும்ப கேள்வி எழுப்பிய போதும் கூட, அதற்கு சரியான பதிலை உள்துறை அமைச்சரால் சொல்ல முடியவில்லை. நீட் தேர்வு சரியானது என்றாவது அவர் சொல்லியிருக்க வேண்டும், மாறாக நீட் தேர்வு எதிர்ப்பு ன்பது திசை திருப்பும் முயற்சி என்பதை மட்டும்தான் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதையும் படிங்க: பாஜகவோடு கைக்கோர்த்ததில் பெருமை..! இது முன்னேற்றத்திற்கான கூட்டணி.. மார்தட்டிக் கொள்ளும் இபிஎஸ்..!