திமுக பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் துரைமுருகன், மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசியது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
துாத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே, இளையரசனேந்தலில் நேற்று முன்தினம் நடந்த திமுக பொதுக் கூட்டத்தில், அக்கட்சியின் பொதுச் செயலாளரும், நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் பேசுகையில், ''பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, மக்களுக்கான திட்டங்களையும், நிதியையும் தருவதை விட்டு விட்டு வேறு பணிகளில் ஈடுபடுகிறது. ஒவ்வொரு மாநிலமும், அவர்களுக்கு அடிமையாக இருக்க வேண்டும். அவர்களுக்கு சலாம் போடுகிறவர், அங்கு முதல்வராக இருக்க வேண்டும். சலாம் போடாதவரை, துாக்கி எறிய வேண்டும் என்பதை அவர்கள் செய்கின்றனர்.

மொழி அழிந்தால் இனம் அழியும் என்பதால் தமிழகத்தில் மொழியை அழித்து, ஹிந்தியை திணிக்கப் பார்க்கின்றனர். மொழியை அழிப்பது, பயம் காட்டுவது, பட்டினி போடுவது அவர்கள் திட்டம். அனைத்து நிதியையும் மத்திய அரசு நிறுத்தினாலும், தமிழகத்தில் எங்களால் ஆட்சி நடத்த முடியும்.
இதையும் படிங்க: அடித்து சவால் விட்ட துரைமுருகன்..! திமுகவுடன் கைகோர்த்த பாஜக..!
தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும்தான் கட்சிகள். மற்றவை எல்லாம் கட்சிகள் இல்லை. அதிமுகவும், பாஜவும் ஒரே அணியில் சேரும். நொண்டி, கூன், குருடு போன்றவர்களை சேர்த்துக் கொண்டு, திமுகவை எதிர்க்கப் பார்க்கின்றனர். அவற்றை எல்லாம் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்'' எனப் பேசினார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து வரும் பலரும், ''நொண்டி, கூன், குருடு போன்றவர்களை சேர்த்துக் கொண்டு, திமுகவை எதிர்க்கப் பார்க்கின்றனர். அவற்றை எல்லாம் சமாளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்றே பொது செயலாளர் பேசியது அவரது கட்சியின் அமைப்பைப்பற்றித்தான் பேசியுள்ளார். அவரது கட்சியில் ஒரு கட்சி நொண்டி. அது யார் என்று அவர்களுக்கே தெரியும். இன்னொரு கட்சி கூன் அதுவும் அவர்களுக்கே தெரியும்.
மற்றொரு கட்சி குருடு. அதை அவர்கள்தான் யார் எந்த கட்சி என்றே சொல்ல வேண்டும். இப்படி கூட்டாட்சி செய்து கொண்டே அடுத்தவர்களைபற்றி ஏளனம் செய்வது இந்த துறையிலுள்ள இந்த துரைமுருகனுக்கு ஈடு யாருமே இல்லை'' என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: தமிழகத்தைத் தவிர்த்தால் தமிழகத்தில் இடமே இல்லை.. பிரதமர் மோடியை எச்சரிக்கும் முதல்வர் ஸ்டாலின்!