ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சுவாரஸ்ய தகவல்கள் வெளியாகியுள்ளன.
3 நாட்கள் மட்டுமே வேட்புமனு தாக்கல்:
பொங்கல் விடுமுறை தினங்களில் வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் நடத்தும் அலுவலர் நேற்று மாலை பேட்டி அளித்திருந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் அதனை மறுத்துள்ளார். 3 தினங்கள் மட்டுமே வேட்பு மனு பெறப்படும் என கூறி உள்ளார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்... ரெட்டை இலை சின்னம் விவகாரம்... ஆழம் பார்க்க போட்டியிடும் அதிமுக..

எல்லாமே மூணு தான்:
ஈரோடு மாவட்ட தேர்தல் அதிகாரியும், மாவட்ட ஆட்சியருமான ராஜகோபால் சுன்கரா அளித்துள்ள பேட்டியில், அரசு விடுமுறை தினங்களை தவிர, ஜனவரி 10, 13, 17 ஆகிய மூன்று தினங்கள் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய முடியும். இது தேர்தல் ஆணையத்தின் அறிவிக்கை, இதில் நாங்கள் தலையிட முடியாது. வேட்பு மனு தாக்கல் செய்ய கூடுதல் கால அவகாசம் கேட்டு பரிந்துரை ஏதும் செய்ய முடியாது எனத் தெரிவித்தார்.

தேர்தல் நடத்தை விதிகளை அமல்படுத்த 3 பறக்கும் படைகள், 3 நிலைக்குழு, 3 வீடியோ கண்காணிப்பு குழு, 3 வீடியோ பார்க்கும் குழு, 3 கணக்குகள் தணிக்கை குழு என 5 வகையான குழுக்கள் மூன்று என்ற அடிப்படையிலேயே அமைக்கப்பட்டுள்ளன.
பிற கட்டுப்பாடுகள் என்னென்ன?
அரசியல் கட்சிகள் அனைத்து வகை விளம்பரங்கள் அகற்றப்பட வேண்டும். அரசு சுவர்கள் 24 மணி நேரத்திலும், பொது இடத்தில் 48 மணி நேரத்திலும், தனியார் இடங்களில் 72 மணி நேரத்திலும் அகற்ற காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு அறைகள் 24 மணி நேரம் இயங்கும். பொது மக்கள் தேர்தல் நடத்தும் விதி மீறல் புகார் தொடர்பாக சி விஜில் ஆப் மூலம் புகார் அளிக்கலாம். பெய்டு செய்திகள் புகார் வந்தால்MCMC கண்காணிப்பு குழு பார்த்து அறிக்கை அளிப்பர். அதன் படி நடவடிக்கை எடுக்கப்படும். mcmc குழுவிடம் முன் தணிக்கை சான்று பெற்ற பிறகே அரசியல் கட்சிகள் விம்பரங்களை அச்சிட வேண்டும். தேர்தல் தொடர்பாக 1950 என்ற எண்ணில் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் சுவாரஸ்யங்கள்... முந்தி கொண்ட காங்கிரஸ்... கோபத்தில் திமுக.... யோசிக்கும் அதிமுக..