சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து கொடைக்கானலில் இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் அனைத்து துறை அதிகாரிகள் பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர்.

மலைகளின் இளவரசி என்று அழைக்கப்படும் கொடைக்கானல் உலகளாவிய சுற்றுலாத்தலம். கொடைக்கானலுக்கு ஆண்டு தோறும் பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். கொடைக்கானலில் கோடை விடுமுறை நாட்களிலும் வார விடுமுறை நாட்களிலும் கொடைக்கானலுக்கு அதிக அளவில் சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். இதனால் கொடைக்கானலில் உள்ள முக்கிய சாலைகள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்லக்கூடிய பிரதான சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சுற்றுலாப் பயணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வந்தனர்.
இதையும் படிங்க: சாலை வசதி இல்லாததால் அவலம்.. 8 கி.மீ டோலி கட்டி தூக்கி வந்த உறவினர்கள்.. பெண்ணை காப்பாற்ற முடியாததால் சோகம்..!

கடந்த ஆண்டு மே மாதம் இ பாஸ் நடைமுறை கொண்டுவரப்பட்டது. இ பாஸ் நடைமுறையை தொடர்ந்து கொடைக்கானலுக்கு வரக்கூடிய அனைத்து வாகனங்களும் இ_பாஸ் பெற்ற பிறகு சோதனை சாவடிகளில் இ-பாஸ் பரிசோதனைக்கு பிறகு தான் கொடைக்கானலுக்கு அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்நிலையில் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து இ-பாஸ் முறை அமலானது இ பாஸ் நடைமுறையில் இருந்தபோது ஐஏஎம் (iim )மற்றும் ஐஐடி (iit) நிறுவனங்கள் கொடைக்கானலுக்கு எத்தனை வாகனங்கள் வருகின்றன வாகனங்களுக்கு ஏற்ப சாலைகள் அமைக்கப்பட்டிருக்கிறதா? உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட்டு வந்த நிலையில் தற்போது வரை ஆய்வுகள் முழுமையாக முடியாத நிலையில் கடந்த 13ஆம் தேதி உயர்நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்திருக்கிறது.

இந்த உத்தரவின் அடிப்படையில் கொடைக்கானல் மற்றும் உதயக்கு வாகனங்கள் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது இந்த கட்டுப்பாடுகளை தொடர்ந்து கொடைக்கானலுக்கு வார நாட்களில் நான்காயிரம் வாகனங்களும் வார விடுமுறை நாட்களில் 6000 வாகனங்கள் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதை எடுத்து ஏப்ரல் 1 ஆம் தேதியிலிருந்து இந்த உத்தரவு அமலுக்கு வர இருக்கிறது இதனைத் தொடர்ந்து இன்று திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் சரவணன், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் , கொடைக்கானல் ஆணையாளர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டா அனைத்து தரப்பு அரசு அதிகாரிகளும் கொடைக்கானலில் உள்ள பிரதான சாலைகள் முக்கிய சுற்றுலாத்தலங்கள் ஆன குணா குகை , தூண்பாறை, ஏரி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வுகளை மேற்கொண்டனர். இதில் இ- பாஸ் நடைமுறை , நெகிழி பயன்பாடு முழுவதுமாக குறைத்தல் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டனர்.
இதையும் படிங்க: ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்பவர்களே... ஏப்ரல் 1 முதல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு...!