அம்பேத்கர் பிறந்தநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபும் அரசு ஆண்கள் பள்ளி முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக திமுக எம்.எல். ஏ. உதயசூரியன் தலைமையில் அக்கட்சியினர் சென்றுள்ளனர். அதே நேரத்தில், பாஜகவினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்த சென்றுள்ளனர்.யார் முதலில் மரியாதை செலுத்துவது என்பதில் இருதரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

இதேபோல், மதுரை மாவட்டம் தள்ளாக்குளம் அவுட் போஸ்ட் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக வழக்கறிஞர்கள் சென்றுள்ளனர். தொடர்ந்து மரியாதை செலுத்திவிட்டு சென்றபோது, அங்கிருந்த பாஜகவினரை கண்டு கோஷம் எழுப்பியுள்ளனர்.
இதையும் படிங்க: 350 ஆண்டுகால தர்காவை இடித்து தள்ளி வஃக்பு நிலத்தை ஆக்கிரமித்த திமுக... பகீர் கிளப்பும் தடா ரஹீம்..!

இதனையடுத்து பாஜகவினரும் மாறி மாறி கோஷம் எழுப்பியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதையும் படிங்க: அந்த விஷயத்துல ஸ்டாலினுக்கு சாமர்த்தியம் பத்தல... எள்ளி நகையாடிய ராஜேந்திர பாலாஜி...!