காஞ்சி தெற்கு மாவட்டம் இலத்தூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் செய்யூரில் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா மற்றும் பட்ஜெட் விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் ஒன்றிய கழக செயலாளர் எம். எஸ்.பாபு தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளர்களாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன், காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க.சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் பாராளுமன்ற உறுப்பினர் க.செல்வம், தலைமைக்காக பேச்சாளர் சூரியமகள்ஆண்டாள் பிரியதர்ஷினி ஆகியோர் கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினர்.

அப்பொழுது உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அவர்கள் பேசுகையில் உத்திரபிரதேசம், பீகார், ஒடிசா, கேரளா, அனைத்து மாநிலத்திலும் பாஜக ஓரிடம், ஐந்துஇடம், பத்து இடம் பிடித்தது, ஆனால் பெரியார் பூமியில் தமிழ்நாட்டில் 40க்கு 40 திமுக வெற்றி என்று சொன்னால் டெல்லிக்கு பாஜக ராஜாவாக இருந்தாலும் தமிழ்நாட்டுக்கு பிச்சைக்காரனாக பாஜக உள்ளது என்றார்.
இதையும் படிங்க: கெஜ்ரிவால் போல ஸ்டாலினும் ஜாமினில் வந்து பிரசாரம் செய்வார்.. கே.பி.ராமலிங்கம் கணிப்பு!

திமுகவை விட மக்களுக்கு உழைத்த கட்சி எது, பாடுபட்ட கட்சி எது, சிறைக்குப் போகிற கட்சி எது, இந்தியாவில் துணிந்து நிற்கும் கட்சி எது என்று அடையாளம் காட்ட முடியுமா எனவும், 1976இல் முதலமைச்சராக இருந்த கலைஞர் அவர்கள் ஜனவரி 26 ஆகஸ்ட் 15 அப்பொழுது டெல்லியில் கொடி ஏற்றுவது போல் அந்தந்த மாநிலத்தில் அந்தந்த முதலமைச்சர்கள் கொடியேற்றும் உரிமையை விட்டு தர வேண்டும் என்று கேட்டு உரிமையை போராடி சென்னை கோட்டையில் தேசிய கொடியை ஏற்றுகின்ற உரிமையை பெற்றுத் தந்தவர் கலைஞர் எனவும், அதேபோல் பல்கலைக்கழக துணைவேந்தர்கள் எங்களை பார்க்க வரக்கூடாது என்று ஆளுநர் தடுத்தாரோ அந்த துணை வேந்தர்களை சந்தித்து உயர்கல்வியில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பது குறித்து சட்டரீதியாக ஆலோசனை செய்ய அழைக்கிறார் முதலமைச்சர் என்று புகழாரம் சூட்டினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில இளைஞரணி துணைச் செயலாளர் அப்துல்மாலிக், மாவட்ட கவுன்சிலர் ஜெயலட்சுமிமகேந்திரன், ஒன்றிய கவுன்சிலர் கிருஷ்ணவேணிதணிகாசலம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள் அணிகளின் அமைப்பாளர்கள் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
இதையும் படிங்க: 2026 தேர்தலில் டெபாசிட் கூட கிடைக்காது.. டெல்லி எஜமானர்களிடம் சொல்லிடுங்க.. நயினாரை நயப்புடைத்த ஆர்.எஸ். பாரதி!!