
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேடுதல் குழுவை வேந்தரான ஆளுநரே முடிவு செய்வார், ஆளுநர் பரிந்துரைப்பவரே தேடுதல் குழுவின் தலைவராகவும், யுஜிசி, பல்கலைக்கழக உறுப்பினர் பரிந்துரைப்பவர்களே உறுப்பினர்களாக ஆக முடியும் என யுஜிசி புதிய விதிகளை வெளியிட்டுள்ளது. இதனால் மாநில அரசின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.ஆளுநர்களுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் யுஜிசி விதிகளில் திருத்தம் மேற்கொண்டுள்ளது அரசியலமைப்புக்கு எதிரானது எனத் தெரிவித்து தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்தார்.

இந்த தீர்மானத்தை எதிர்த்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்த நிலையில், காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள் உள்ளிட்ட திமுக கூட்டணிக் கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சியான அதிமுக ஆதரவளிப்பதாக தெரிவித்தது.இதனைத் தொடர்ந்து, குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
சட்டப்பேரவையில் முதலமைச்சர் கொண்டுவந்த தனித் தீர்மானத்தை ஏற்க மறுப்பு தெரிவித்து பாஜகவினர் வெளிநடப்பு செய்தனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் ஏற்கனவே மூன்று பேர் துணைவேந்தர்கள் நியமிக்கும் குழுவில் உள்ளார்கள் மேலும் ஒருவரே கூடுதலாக சேர்க்க தான் யுஜிசி குறிப்பிட்டுள்ளது. மேலும் பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் நியமிப்பதில் முனைவர் பட்டம் பெற்றவர்களை மட்டுமே நியமிக்க வேண்டும் என்று அந்த சட்ட வரைமுறை கூறுகிறது ஆனால் தமிழக அரசு ஏற்கனவே உள்ள நடைமுறையை பின்பற்ற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களுக்கு அந்த சட்ட திருத்தத்தில் மாற்றும் தேவை என்றால் மத்திய அரசு இதற்கு பிப்ரவரி 5ஆம் தேதி வரை கால கேட்டு நிர்ணயித்திருப்பதாகவும் , அதற்கு எடுத்துரைக்காமல் தற்போது இந்த தீர்மானம் கொண்டு வந்து உள்ளார்கள். இது வரைவு அறிக்கை இறுதியானது அல்ல. வெளிநாட்டு மாணவர்களுடன் நம் மாணவர்கள் போட்டி போடும் வகையில், கல்வி தொடர்பாக திருத்தங்கள் வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் நாங்கள் பேசும்போது நேரலை செய்யப்படாமல் இருப்பது வருத்தம் அளிப்பதாகவும் ஒரு தலைப்பட்சமாக செயல்படுவதாகவும் தெரிவித்தார்.

நயினார் நாகேந்திரனை தொடர்ந்து மொடக்குறிச்சி பாஜக எம்எல்ஏ சரஸ்வதி பேசுகையில் மொடக்குறிச்சி பகுதியில் உள்ள பள்ளியில் மாணவர்கள் வகுப்பறை இல்லாமல் பால்கனியில் உட்கார்ந்து படிக்கும் அவல நிலை இருப்பதாகவும், அந்தப் பள்ளியின் சுற்றுச்சுவர் இல்லாமல் இரவு நேரங்களில் மது குடிப்பவர்களின் கூடாரமாக விளங்குவதாகவும் இதன் தொடர்பாக சட்டமன்றத்தில் பேசி உள்ளேன் அதன் வீடியோ வெளிவராமல் இருப்பது சபாநாயகரிடம் முறையிட உள்ளேன் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: புதிய யூஜிசி விதிகள்...அமல்படுத்த துடிக்கும் மத்திய அரசும் தமிழக அரசின் எதிர்ப்பும்..சட்டமன்றத்தில் சிறப்பு தீர்மானம் வருமா?