“மாணவிகள் என்னை அப்பா.. அப்பா.. என்று அழைக்கும்போது அளவில்லா மகிழ்ச்சி அடைகிறேன்'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கமாக பேசினார்.
சட்டப்பேரவையில் பதிலுரை அளித்துப்பேசிய மு.க.ஸ்டாலின், ‘‘இன்றைக்கு முதலமைச்சராக இருக்கக்கூடிய நான் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் சட்டமன்றம் நூற்றாண்டு வரலாறு கொண்டது. கோடிக்கணக்கான மக்களின் உணர்வுகளால் ஆன சட்டமன்றம். இந்த சட்ட மன்றத்தின் மாண்பையும் மதிக்காமல் மக்களின் உணர்வுகளுக்கும் மதிப்பு தராமல் தமிழ்த்தாய் வாழ்த்தை அவமானப்படுத்த துணிந்தன் மூலமாக தான் வகிக்கிற பதவிக்கு பொறுப்புக்கு ஏற்படுகிற இழுக்கை அரசியல் உள்நோக்கத்தோடு ஆளுநர் செய்வது இந்த மன்றம் இதுவரை காணாதது. இனியும் காணக் கூடாது.

அவர் அரசியல் ரீதியாக எங்களை புறக்கணிப்பதை நாங்கள் பெரிய விஷயமாக எடுத்துக் கொள்வதில்லை. ஏனென்றால் திமுக என்பது புறக்கணிப்புகள், ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஆரம்பிக்கப்பட்டது தான். ஒரு சமூக சீர்திருத்த இயக்கம் அரசியல் கட்சியாக மாறி ஆறு முறை பதவி வகிப்பது திமுக தான். 7 வது முறையாக ஆட்சியமைத்து ஏற்றம் காணும் அரசாக திராவிட முன்னேற்ற கழகம் தான் இருக்கப் போகிறது. ஆறாவது முறையாக ஆட்சி அமைத்த போது விடியல் ஆட்சியாக இருக்கும் என்று சொன்னோம்.
இதையும் படிங்க: உடையும் திமுக கூட்டணி... திருமாவுக்கும் கொக்கி.. குதூகலத்தில் எடப்பாடி பழனிசாமி..!
இப்போது மக்களால் புறக்கணிக்கப்பட்ட எதிர்க்கட்சிகள் விடியல் ஆட்சி எங்கே என கேட்கிறார்கள். விடியலாட்சி என்று நாங்கள் சொல்வது மக்களுக்கு தானே தவிர, மக்களுக்கு எதிரானவர்களுக்கு ஆனது அல்ல. விடியலை பார்த்தால் அவர்களுக்கு கண்கள் கூசத் தான் செய்யும். நான் சொல்லுகிற இடங்கள் எல்லாம் மக்கள் முகத்தில் புன்னகை தெரிகிறது. அதுதான் விடியலின் அடையாளம்.
நான் முதலமைச்சராக பொறுப்பேற்றுவதற்கு மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன். திமுக அரசு செயல்படுத்திய ஒவ்வொரு திட்டங்களை சொல்லிக்கொண்டே போனால் எதிர்க்கட்சிகள் கொஞ்சம் வேதனை தான் செய்வார்கள். ஆகையால் இந்த திட்டங்களை நான் சொல்வதை குறைத்து கொள்கிறேன். திராவிட மாடல் ஆட்சி என்று சொன்னால் சிலருக்கு வயிறு எரிகிறது. அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று சொல்வதைப் போல. திராவிடம் என்ற சொல்லை பயன்படுத்தினாலே சிலர் அலறுகிறார்கள்.
சகோதரத்துவம், சமத்துவம், ரத்த பேதம் இல்லை, சாதி பேதுமில்லை, தொழில் முன்னேற்றம், ஜாதி, மத வேறுபாடு இன்மை, கூட்டாட்சி, தமிழுக்கு உரிய மரியாதை, அனைத்து மாநிலங்களுக்கும் சம உரிமை இவைதான் திராவிட மாடல் அரசின் உள்ளடக்கம். வளர்ச்சி அனைத்து மாநில வளர்ச்சி, அனைத்து மாவட்ட வளர்ச்சி, அனைத்து மக்களின் வளர்ச்சி... இதைத்தான் எல்லோருக்கும் எல்லாம் என்று சொல்கிறேன்.
திராவிட கருத்தின் கொள்கைகள் தான் தமிழ்நாடு இன்று வளர்ந்த மாநிலமாக இருக்கிறது. இந்தியாவில் தமிழ்நாடு இரண்டாவது பொருளாதாரம் மாநிலமாக வளர்ந்து இருக்கிறது. தமிழ்நாட்டில் எங்கும் அமைதி நிலைநாட்டப்பட்டு வருகிறது. குற்றங்கள் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. அப்படியே குற்றம் செய்தாலும் குற்றவாளி உடனடியாக கைது செய்யப்படுகிறார். எந்த குற்றவாளியையும் யாரும் கைது செய்வதில் சுணக்கம் காட்டுவதில்லை.
குற்றவாளிகள் யாருக்கும் எந்த சலுகையும் கிடையாது. குடும்ப பிரச்சினை, காதல் விவகாரம், பணப் பிரச்சினை, சொத்து விவகாரம், தனிப்பட்ட முன்விரோதம், வாய் தகராறு ஆகியவற்றால் மட்டுமே கொலைகள் நடந்திருக்கிறது. அரசியல் கொலைகள், சாதியக் கொலைகள், மதக் கொலைகள் திமுக ஆட்சியில் முளையிலேயே கிள்ளப்பட்டு ஒழிக்கப்பட்டு இருக்கிறது. இந்தியாவிலேயே அதிக பாதுகாப்போடு இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்பதை இங்கு நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
எதிர்கட்சியான அதிமுக சார்பில் கருப்பு உடை அணிந்து வந்த போது எனக்கு கோபம் எல்லாம் வரவில்லை... சிரிப்புதான் வந்தது. இப்படியாவது கருப்பு சட்டை போடுகிறார்களே என்று மகிழ்ச்சி அடைந்தேன்.

கருப்பு சட்டை அணிந்து வருவது உங்களது உரிமை. ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில சட்டமன்றத்தை அவமதிக்கிறார். அவரை எதிர்த்து கருப்பு சட்டை அணிந்து வந்து போராட உங்களுக்கு துணிவில்லை. ஈவு, இரக்கமில்லாமல் மாநில அரசுக்கு வரவேண்டிய தொகை மத்திய அரசு தடுத்து வைத்திருக்கிறது. அதை கண்டித்து நீங்கள் கருப்பு சட்டை அணிந்து வந்திருந்தால் மகிழ்ச்சி அடைந்திருப்பேன் வரவேற்று இருப்பேன்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிக்கு வந்தபின் சுமார் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி அளித்திருக்கிறேன். என்னை சர்வாதிகாரி என யாரும் சொல்ல மாட்டார்கள்; அளவுக்கு மீறி ஜனநாயகவாதியாக இருக்கிறீர்கள் என்று தான் சொல்வார்கள். கடந்த 3 ஆண்டுகளில் ஒரு லட்சம் போராட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.பட்டினிச் சாவற்ற மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம் பெற்றுள்ளது’’ என அவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப்போவது யார்? - திமுக வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!