பாமக கெளவரத் தலைவர் ஜி.கே.மணியின் முதல் மனைவியின் சகோதரர் தனராஜ் மகன் டாக்டர் சேதுநாயக், - விமலாம்பிகை திருமண வரவேற்பு நிகழ்ச்சி சேலம் மெய்யனூர் சூரமங்கலம் மெயின் ரோடு ஸ்ரீ வரலக்ஷ்மி மஹாலில் நேற்று முன் தினம் நடைபெற்றது. நேற்று காலை 9 மணிக்கு திருமணம் நடைபெற்றது.

முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களை நேரில் சந்தித்து தனது பேரன் திருமண அழைப்பிதழை ஜி.கே.மணி வழங்கி இருந்தார். இந்தநிலையில், சேலத்தில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்டோர் சென்னையில் இருந்து ஒரே விமானத்தில் சேலம் சென்று கலந்து கொணடனர்.
அங்குதான் ஒரு ட்விஸ்ட். திருமண வரவேற்பிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்ளாமல் தனது மகன் மிதுனை அனுப்பி வைத்திருந்தார். மிதுன் பொது நிகழ்ச்சிகளில் இதுவரை கலந்து கொண்டது இல்லை. அதிமுகவில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள் பலபேருக்கு மிதுனை அடையாளமே தெரியாது. எடப்பாடி பழனிசாமி, முதன்முறையாக அவரது மகன் மிதுனை அரசியல் களத்தில் இறக்கியிருக்கும் தகவல் அதிமுக வட்டாரத்தில் பரபரப்பாக்கி இருக்கிறது.
இதையும் படிங்க: எடப்பாடி, சசிகலா, ஓபிஎஸ், தினகரன் ஒரே அணியில்...தாய் வழி வந்த தங்கங்கள்...போஸ்டரால் பரபரப்பு
இதுவரை எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் எடப்பாடி பழனிசாமிதான் சென்று வந்தார். மகன் மிதுனை எங்கும் அழைத்துச் செல்வது கிடையாது. அவரும் இருக்கும் இடம் தெரியாமல் உள்ளே இருந்தே அனைத்து வேலைகளையும் செய்து வந்து கொண்டிருந்தார். ஆனால் முதன்முறையாக பாமக கெளவரவத் தலைவர் ஜி.கே.மணி இல்லத் திருமணத்தில் களமிறங்கி இருக்கிறார்.

டி.டி.வி.தினகரன் அருகில் மிதுன் (பழைய படம்)
அவருடன் எடப்பாடி பழனிசாமியின் நெருக்கமானவர்கள் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்டோர் சென்றுள்ளனர். அங்கே அறுசுவை உணவை சாப்பிட்டுக் கொண்டு இருக்கும்போது ஓ.பி.எஸ் உள்ளே சென்றிருக்கிறார். இதனை சற்றும் எதிர்பாராத எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் உள்ளிட்டோர் ஷாக்காகி இருக்கிறார்கள். ஓ.பி.எஸை அன்கு சற்றும் எதிர்பார்க்காத அவர்கள் சாப்பிட்டும், சாப்பிடாமலும் அவசரமாக வெளியேறி இருக்கிறார்கள்.
அதேபோல் ஓ.பி.எஸ் வந்திருப்பதை அறிந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் இருவர், அவர் வெளியே கிளம்பும் வரை காரில் இருந்தே இறங்கவில்லை. ஓ.பி.எஸ் கிளம்பிய பிறகே அவர்கள் இருவரும் திருமண வரவேற்பில் கலந்து கொண்டுள்ளதாக அங்கிருந்தவர்கள் விவரித்தனர்.
இதையும் படிங்க: அம்மா உயிரோடு இருந்தா எதிர்ல நிக்க முடியுமா ஒ.பி.ஆர்? உட்கார்ந்தே கும்பிடுவது சரியா? இபிஎஸ் ஆதரவாளர்கள் குமுறல்