ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையம் அடுத்த காஞ்சிக்கோயிலை சேர்ந்தவர் தருண்குமார். வயது 22. இவர் மேட்டுவலுவை சேர்ந்த சுபஸ்ரீ என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் கடந்த 2023ம் ஆண்டு வீட்டை விட்டு வெளியேறி திருமணம் செய்ய முடிவெடுத்தனர். ஒன்றாக ஊட்டியில் ரூம் போட்டு தங்கி உள்ளனர். ஆனால் அப்போது சுபஸ்ரீக்கு 18 வயது கூட நிரம்பவில்லை. இதனிடையே சுபஸ்ரீயை காணவில்லை என அவரது தந்தை அளித்த புகாரின் பேரில் தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார் அவரின் மொபைல் போன் எண்ணை வைத்து ஊட்டில் இருப்பதை தெரிந்து கொண்டனர். அங்குள்ள லோக்கல் போலீஸ் உதவியுடன் சுபஸ்ரீயை மீட்ட போலீசார் தந்தையிடம் பெண்ணை ஒப்படைத்தனர். சுபஸ்ரீக்கு புத்திமதியும் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே 18 வயது கூட நிரம்பாத பெண்ணை காதலிப்பதாக கூறி கடத்தி சென்றதாக தருண்குமாரை கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர். சுபஸ்ரீக்கு 18 வயது ஆகும் காத்திருந்த அவரது பெற்றோர், 18 வயது நிரம்பியதும் வேறோர் இடத்தில் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். ஏற்கனவே உன்னால் நடந்த அவமானத்தில் இருந்த இன்னும் நாங்கள் மீளவில்லை. திருமணம் முடிந்து போகும் இடத்திலாவது எங்களது பெயரை காப்பாற்று என புத்திமதி சொல்லி அனுப்பி உள்ளனர். சுபஸ்ரீயும் திருமணத்திற்கு பின்பு காதலனை மறந்து கணவனுடன் வாழ்ந்து வந்துள்ளார். இதனிடையே சிறையில் காதலியின் நினைப்பாகவே இருந்த தருண்குமார், வேறு எந்த குற்றப் பின்னணியும் இல்லாததாலும், நன்னடத்தையாலும் ஜாமினில் வெளியே வந்தார்.
இதையும் படிங்க: ஈரோடு தேர்தலில் திமுக வெற்றி..! முதலமைச்சருக்கு சமர்ப்பிக்கிறேன் சந்திரகுமார் பேட்டி

வெளியில் வந்ததும் தனது காதலிக்கு திருமணம் நடந்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். பெற்றோர் வற்புறுத்தலால் தான் தனது காதலி திருமணம் செய்திருப்பாள், நாம் அழைத்தால் கண்டிப்பாக நம்முடன் வருவாள் என நினைத்து காதலிக்கு தருண்குமார் அழைத்துள்ளார். ஆனால் தனக்கு திருமணம் முடிந்த கையோடு அனைத்தும் முடிந்து விட்டது. இனி தொந்தரவு செய்யாதே என சுபஸ்ரீ தொடர்பை துண்டித்துள்ளார். ஆனாலும் தருண்குமார், அடிக்கடி சுபஸ்ரீக்கு போன் செய்து தொந்தரவு செய்துள்ளார். தனது முன்னாள் காதல் விவகாரம் கணவருக்கு தெரிந்தால் குடும்ப நிம்மதி பறிபோகும் என்பதால் அவ்வப்போது தருண்குமாரை தனிமையில் சந்தித்து இத்துடன் முடித்துக் கொள்வோம் என முறையிட்டுள்ளார்.
ஆனால் தருண்குமார் இந்த உறவை தொடர திட்டமிட்டதால், அவரை தீர்த்துக்கட்ட சுபஸ்ரீ திட்டம் போட்டுள்ளார். அம்மா வீட்டிற்கு செல்வதாக கணவரிடம் கூறிவிட்டு மேட்டுவலவு வந்த சுபஸ்ரீ, தனது உறவுக்கார கல்லூரி மாணவரான தரணிதரனிடம், தருண்குமார் செய்த டார்ச்சர்களை சொல்லி அழுதுள்ளார். அவன் செத்தால் தான் நிம்மதி என கூறியுள்ளார். இதையடுத்து தனது வீட்டிற்கு பின்னால் உள்ள தோட்டத்தில் தருண்குமாரின் கதையை முடிப்பது என அவர்கள் திட்டம் தீட்டினர். அவர்களின் திட்டம் தெரியாமல் காதலியை இரவில் தனிமையில் தோட்டத்தில் சந்திக்க போவதாக குஷியில் இருந்த தருண்குமார், நண்பன் வீட்டுக்கு செல்வதாக கூறிவிட்டு தனிமையில் அங்கு வந்துள்ளார்.

அப்போது மறைத்து வைத்திருந்த கத்தியால் தருண்குமாரை சுபஸ்ரீ குத்த, உறவினர் தரணிதரன், தருண்குமாரின் கழுத்தை நெறித்து கொலை செய்ய முயன்றுள்ளார். அவர்களிடம் இருந்து வெட்டுக்காயங்களுடன் தப்பிய தருண்குமார், மெயின் ரோட்டிற்கு ஓடி வந்து அங்கிருந்தவர்களின் உதவியுடன் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். போலீசாரின் விசாரணையில் அனைத்தையும் கொட்டி தீர்த்துள்ளார். இதனடிப்படையில் சுபஸ்ரீயையும், தரணிதரனுடன் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் 72 சதவீத வாக்குப்பதிவு.. வெற்றி யாருக்கு..?