இந்திய பெரும்தொழில் அதிபர் கௌதம் அதானி மற்றும் அவரதுமருமகன் சாகர் அதானி ஆகியோர் மீது அமெரிக்க எஃப் சி பி ஏ சட்டத்தை மீறியதாக குற்றச்சாட்டுகள் வெளியாகின. இதனை அடுத்து அதானிக்கு கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அந்த அளவிற்கு இந்த விஷயம் மிகவும் சீரியஸ் ஆகி போனது இதனால் ஒட்டுமொத்த அதானி குழுமமே ஆடிப் போனது என்றே சொல்லலாம்.
தற்போது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பில் வெளிநாட்டு ஊழல் நடைமுறை சட்டம் அதாவது எஃப். சி.பி. ஏ சட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்பின் இந்த அறிவிப்பு கௌதம் அதானி போன்று எப்.சி பி.ஏ சட்டத்தால் சிக்கி பரிதவித்து வந்த பெரும் தொழிலதிபர்களுக்கு மிகப்பெரிய ஆறுதலாக அமைந்துள்ளது.

எப்.சி.பி.ஏ சட்டம் என்பது 1977 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட வெளிநாட்டு ஊழல் நடைமுறை சட்டமாகும். திருத்தப்பட்ட சட்டத்தின்படி 15 யூஎஸ்சி 78 டிடி 1seq( FCPA) படி தங்களது வணிகத்தை பெறுவதற்கு அல்லது தக்க வைத்துக் கொள்வதற்கு உதவுவதற்காக வெளிநாட்டு அரசாங்க அதிகாரிகளுக்கு மற்றும் நிறுவனங்களுக்கு பணத்தை செலுத்துவது சட்டவிரோமாக கருதப்படும் என்பது இந்த சட்டத்தின் முக்கிய நோக்கம் ஆகும்.
இதையும் படிங்க: அதானிக்கு ஆதரவாக அமெரிக்க எம்.பி.க்கள்: ஊழல் வழக்கை கைவிடக் கோரி அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம்
இந்த அடிப்படையில் அதானி மற்றும் அவரது கூட்டாளிகள் அமெரிக்க அதிகாரிகள் மற்றும் நிறுவனங்களுக்கு லஞ்சம் கொடுத்து சட்டத்தை வளைத்து இருக்கிறார்கள் என்பது குற்றச்சாட்டு ஆகும். நேற்று அதாவது திங்கட்கிழமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கையெழுத்திட்டு வெளியிட்ட ஒரு நிர்வாக உத்தரவில் எப்.சி. பி.ஏ சட்டத்தை முற்றிலுமாக நீக்குவதாக அறிவித்துள்ளார்.

இப்படி ஒரு அறிவிப்பால் அதானி மீது கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு மொத்தமாக அடிபட்டு விடுகிறது, சட்டமே சுத்தமாக நடைமுறையில் இல்லை என்பதால் வழக்கும் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்வது கேள்விக்குறியே ஆகும்.
கடந்த 2024 நவம்பர் 20 அன்று அமெரிக்காவின் செக்யூரிட்டி எக்ஸ்சேஞ்ச் கமிஷன்(SEC )மற்றும் DOJ ஆகியவை இந்திய தொழிலதிபர் கௌதம் அதானி அவரது மருமகன் சாகர அதானி Azure power global ltd இன் வணிக பங்குதாரர் சிவில் கபேண்ட்ஸ் மற்றும் மற்ற முக்கியமான நிர்வாகிகள் மீது எப் சி பி ஏ சட்டம் பாய்ந்து உள்ளது என கூறி திடுக்கிட வைத்தனர்.
அதாவது 250 மில்லியன் டாலர் அளவிற்கு லஞ்சப் பணமாக இவர்கள் சட்டத்தை வளைக்க கொடுத்துள்ளார்கள் என்பது முக்கிய குற்றச்சாட்டாகும். ஊழல் நடைமுறையில் ஈடுபட்டது ஒரு குற்றம் என்றால் மற்றொரு பக்கம் அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி தவறாக வழிநடத்தியதாக செக்யூரிட்டி எக்ஸ்சேஞ்ச் கமிஷன் குற்றச்சாட்டுவைத்தது.
செப்டம்பர் 2021ல் அதானி கிரீன் பாண்டு வழங்கிய போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இது அமெரிக்க முதலீட்டாளர்களிடமிருந்து 175 மில்லியன் டாலர் உட்பட 750 மில்லியன் டாலர்களை இதுவரை நிதியாக பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நியூயார்க் கிராண்ட் ஜூரி மற்றும் பல சூரிய ஆற்றல் ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. அதானி மற்றும் அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் மீது மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. பத்திர மோசடி சதி மற்றும் பங்குச்சந்தை மோசடி என மூன்று மோசடிகள் அவர்கள் மீது குற்றச்சாட்டாக வைக்கப்பட்டன. இந்த குற்றச்சாட்டுகளை அடுத்து செய்தி வெளியான உடனேயே அதானியின் பங்குச்சந்தை பங்குகள் 20 % சரிந்தன.
இந்த குற்றச்சாட்டுகளை முற்றிலுமாக நிராகரித்த அதானி குழுமம் எங்களது நற்பெயருக்கு உலகளாவிய செயல்பாடுகளுக்கும் கலங்கத்தை விளைவிக்கும் வகையில் இது உள்ளது என சவால் விடுத்தனர். இந்த நிலையில் தான் புதிதாக பதவி ஏற்றுள்ள அமெரிக்க அதிபர் இந்த நாள் டிரம்ப் எஃப் சி பி ஏ சட்டம் அமெரிக்க தொழிலதிபர்களுக்கு பாதகமாக இருப்பதாக கூறி அந்த சட்டத்தை முற்றிலுமாக ரத்து செய்து புதிய சட்டத்தை உருவாக்கும் அமெரிக்கா அட்டர்னி ஜெனரலுக்கு உத்தரவிட்டுள்ளார். டொனால்ட் டிரம்ப் இன் இந்த சட்டத்தால் யாருக்கு என்ன பலன் என தெரியாது ஆனால் கௌதம அதானிக்கு அடித்தது ஜாக்பாட் என்று சொல்லலாம்.
இதையும் படிங்க: புதிய பாய்ச்சலில் மேக் இன் இந்தியா... IIT மெட்ராஸ் - ISRO இணைந்து தயாரித்துள்ள செமி கண்டக்டர்கள்..