ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக அரசு இடையில் மோதல் நிலவி வருகிறது. தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் ரவி நிறுத்தி வைத்திருந்தார். மசோதா கலை திருப்பி அனுப்பவும் இல்லை. இதனால் ஆளுநரின் செயல் அரசியல் சாசனத்தின் 200 வது பிரிவுக்கு எதிரானது எனக் கூறி தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் ரிட் மனுக்களை தாக்கல் செய்தது.

ஆளுநர் ரவியின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்த உச்சநீதிமன்றம், மவுனமாக இருந்தால் என்ன அர்த்தம் என்று கேள்வி எழுப்பியது.
இதையும் படிங்க: ஆனைமலை புலிகள் சரணாலயத்தில் சாலை அமைக்க மாட்டோம்.. நீதிமன்றத்தில் தமிழக அரசு உத்தரவாதம்..!
இந்த நிலையில், தமிழகத்தில் 28 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்க தனி அதிகாரிகள் நியமிப்பது தொடர்பாக சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டது. மேலும் கனிமவளங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு வரி விதிப்பது தொடர்பாக மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த இரண்டு மசோதாக்களும் ஆளுநரின் ஒப்புதலுக்கு தமிழக அரசு அனுப்பி இருந்தது.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமனம் மற்றும் கனிமங்களை கொண்டுள்ள நிலங்களுக்கு வரி ஆகிய இரண்டு மசோதாக்களுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார்.

அதன்படி, பெரிய கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.7 ஆயிரம் வரை வரியும், சிறு கனிமங்களுக்கு ஒரு டன்னுக்கு ரூ.40 முதல் ரூ.420 வரையும் வரி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பதவிக்காலம் முடிந்த 28 மாவட்டங்களில் உள்ள உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகள் நியமிப்பது தொடர்பான மசோதாவுக்கும் ஒப்புதல் கிடைத்துள்ளது.
இதையும் படிங்க: இனிமே எந்த பயமும் இல்ல..! சேஃபா பயணிக்கலாம்... QR குறியீடுகளை வழங்கிய முதல்வர் ஸ்டாலின்..!