இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் நட்பாக பழகும் இளம்பெண்களுக்கு ஒரு பாடமாக குஜராத் மாநிலத்தில் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்கிறது.
குஜராத் மாநிலம் பல பலன்பூர் எந்த இடத்தில் இருக்கும் கல்லூரி ஒன்றில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அந்த மாணவி படித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் இளைஞர் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் அவரிடம் நட்பை ஏற்படுத்திக் கொண்டார்.

கல்லூரியில் சேரத் தொடங்கிய சில மாதங்களுக்குப் பிறகு, அவர்களிடையே இந்த சமூக வலைத்தள நட்பு ஏற்பட்டது. அந்த மாணவி பனஸ்கந்தா மாவட்டத்தை சேர்ந்தவர். மாணவியின் நிர்வாண வீடியோவை காட்டி மிரட்டி, கிட்டத்தட்ட 16 மாதங்களாக 7 நபர்களால் அவர் பலாத்காரம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காங்கிரஸில் 'துரோகிகள்..!' குளவி கூட்டில் கையை வைத்த ராகுல் காந்தி..!
தொடக்கத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவர் இன்ஸ்டாகிராம் மூலம் அந்தப் பெண்ணை நட்பாகப் பெற்றார். அந்த ஆண்டு நவம்பரில், ஒரு ஹோட்டலில் காலை உணவிற்கு தன்னுடன் சேர்ந்து வரும்படி மாணவியை அவர் வற்புறுத்தி இருக்கிறார். அந்த இளைஞரின் பெயர் விஷால் சவுத்ரி.
மாணவியை அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் திட்டமிட்டபடி டிபன் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவருடைய ஆடையில் எச்சில் உணவை தெரியாதது போல் விஷால் சவுத்ரி கொட்டி விட்டார். பின்னர் அதை சுத்தம் செய்யும் சாக்கில் மாணவியை ஒரு அறைக்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

குளியலறையில் அந்தப் பெண் தனது ஆடைகளை கழற்றிய போது, சவுத்ரி உள்ளே நுழைந்து அவளை நிர்வாணமாக படம் பிடித்ததாகக் கூறப்படுகிறது. அவர் எதிர்ப்பு தெரிவித்த போதெல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிடுவதாக மிரட்டினார்.
அதே கிளிப்பைப் பயன்படுத்தி, நவம்பர் 2023 முதல் பிப்ரவரி 2025 வரை வெவ்வேறு இடங்களில் அந்த அப்பாவி மாணவியை தன்னுடனும் தனது நண்பர்களுடனும் உறவு கொள்ள வற்புறுத்தி பலாத்காரம் செய்து வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இனியும் பொறுக்க முடியாது என்ற நிலைக்கு வந்த அந்த மாணவி பலன்பூர் தாலுகா காவல்துறையை அணுகி நடந்த சம்பவம் குறித்து புகாராக தெரிவித்தார். இதைப் பார்த்த போலீசாரே அதிர்ச்சி அடைந்து விட்டனர்.

அதைத் தொடர்ந்து விஷால் சவுத்ரி உள்ளிட்ட அடையாளம் தெரிந்த ஆறு பேர் மற்றும் அடையாளம் தெரியாத ஒரு நபர் மீது மீண்டும் மீண்டும் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த உள்ளிட்ட பல்வேறு கடுமையான குற்றப் பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து அவர்கள் ஏழு பேரையும் தேடி வருகிறார்கள்.
அத்துடன் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது மின்னணு வடிவத்தில் ஆபாசமான விஷயங்களை வெளியிடுவது அல்லது பரப்புவது தொடர்பாக தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 67 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அமெரிக்க பங்குச்சந்தை மோசடியில் அதானிக்கு நோட்டீஸ்..! குஜராத் நீதிமன்றத்துக்கு மத்திய சட்டத்துறை பரிந்துரை..!