நாடு முழுவதும் லட்சக்கணக்கான முதலீட்டாளர்களை ஏமாற்றி 5 ஆயிரத்து 600 கோடி ரூபாய் வரை மோசடி செய்த ஹீரா கோல்டு எக்ஸிம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது.
36 சதவீதத்திற்கு மேல் லாபம் தருவதாக விளம்பரம் செய்து இந்த மோசடியை செய்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரான நவ்ஹேரா ஷேக், "90 நாட்களில் ரூ.25 ஆயிரம் கோடியை டெபாசிட் செய்ய வேண்டும்; இல்லை என்றால் ஜெயிலுக்கு போக தயாராக இருங்கள்" என்று அதிரடி உத்தரவை உச்சநீதிமன்றம் பிறப்பித்து இருக்கிறது.

ஹீரோ கோல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஷேக் மீது பல்வேறு மாநிலங்களில் மோசடி புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகின்றன.
இதையும் படிங்க: துணிக்கடைகளில் இனி கேரி பேக்கிற்கு பணம் வசூலித்தால் அபராதம்..!
இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற இன்றைய விசாரணையின் போது மேற்கண்ட உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது. அதாவது நீதிமன்ற உத்தரவுப்படி முதலீட்டாளர்களிடமிருந்து மோசடியாக வசூலிக்கப்பட்ட பணத்தின் ஒரு பகுதியை அதாவது 25 கோடி ரூபாயை 3 மாதங்களுக்குள் திருப்பித் தரவில்லை என்றால் அவரை கைது செய்து சிறையில் அடைக்கும்படி அமலாக்க பிரிவு இயக்குனர் அலுவலகத்திற்கு (இடி) உத்தரவிட்டுள்ளது, உச்ச நீதிமன்றம்.
நீதிபதி ஜே பி பர்திவாலா தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு "திருமதி ஷேக் 2024 நவம்பர் 11ஆம் தேதிய நீதிமன்றத்தின் தொடர்ச்சியான உத்தரவுகளை மீறி வருவதாக கூறியது. அந்த சமயத்தில் சரண் அடைவதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டு அவர் 25 கோடி ரூபாய் செலுத்த வேண்டியது இருந்தது.

குற்றம் சாட்டப்பட்டவருக்கு கடைசி வாய்ப்பாக மூன்று மாத காலத்திற்குள் 25 கோடி ரூபாய் அவர் டெபாசிட் செய்ய வேண்டும். தவறினால் அவருடைய ஜாமீன் தானாகவே ரத்து செய்யப்பட்டு விடும். மேலும் அவர் சிறைக்கு அனுப்பப் படுவார் என்று நீதிபதி பர்திவாலா மேலும் கூறினார்.
திருமதி ஷேக்கிற்காக ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல் "அவரிடம் பணம் இல்லை" என்று தெரிவித்தார்.
இருப்பினும் அவருக்கு சொந்தமான பல சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியது. ஆனால் ஏலம் விடக்கூடிய சுமையற்ற சொத்துக்களின் பட்டியல் கேட்டபோது அவருடைய வழக்குரைஞர் அவற்றை வெளியிடவில்லை.

நிர்வாக இயக்குனரின் மூன்று சொத்துக்களின் விவரங்களை மட்டுமே அவர் பகிர்ந்து கொண்டார். அவற்றில் தெலுங்கானாவில் உள்ள இரண்டு சொத்துக்களை இ.டி ஏலம் விட முடியும். ஹீரோ கோல்டு மற்றும் அதன் நிர்வாக இயக்குனர் சம்பந்தப்பட்ட இந்த விஷயத்தில் தீவிர மோசடி புலனாய்வு அலுவலகம் (எஸ் எஃப் ஐ ஓ) விசாரணையை தொடங்கியது.
தெலுங்கானா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் டெல்லியில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. நகைகள் மற்றும் தங்கப் பொருட்களை விற்பனை செய்த இந்த நிறுவனம் முதலீடு செய்யப்பட்டதற்கு 36 சதவீத ஈவுத் தொகை வழங்குவதாக உறுதி அளிக்கும் திட்டங்களை அறிமுகப்படுத்தி இருந்தது.
வழக்கம்போல் தொடக்கத்தில் அது சிலருக்கு ஈவுத்தொகையை அறிவித்தபடி வழங்கியது. ஆனால் 2018 ஆம் ஆண்டில் சில முதலீட்டாளர்கள் நிறுவனம் மற்றும் அதன் நிர்வாக இயக்குனரால் ஏமாற்றப்பட்டதாக கூறி புகார்கள் வந்தன. அதை தொடர்ந்து 2018 அக்டோபரில் ஷேக் கைதானார்.
இதையும் படிங்க: சிக்கல்களில் இருந்து தப்பித்தார் உதயநிதி... உச்சநீதிமன்ற உத்தரவால் நிம்மதி..!