திருப்பத்தூர் மாவட்டம் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஆன ரமேஷ் மற்றும் அவரது இரண்டாவது மனைவி தீபாவுக்கும், அவ்வப்போது குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு பவ்சா நகரில் உள்ள ரமேஷின் தங்கை வரலட்சுமி வீட்டுக்கு தூங்குவதற்காக தீபா சென்றுள்ளார்.

இது குறித்து இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரமேஷ் வீட்டில் இருந்த கத்தியை எடுத்து தீபாவை குத்தியுள்ளார். மேலும் தீபாவளி பல்வேறு இடங்களில் சரமாரியாக வட்டி படுகொலை செய்துகொண்டு ரமேஷ் அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
இதையும் படிங்க: ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆடிய மனைவி.. நடத்தையில் சந்தேகப்பட்டு வெட்டிக்கொன்ற கணவன்.. விருதுநகரில் பரபரப்பு..!

இதுகுறித்து ரமேஷ்-ன் தங்கை அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தகவல் அறிந்த திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் சம்பவ இடத்தில் நேரில் ஆய்வு செய்தார்.
முன்னதாக இது குறித்து திருப்பத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து தலைமறைவான ரமேஷை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: நடத்தையில் சந்தேகப்பட்டதால் விபரீதம்.. கணவனின் கண்ணில் பெவிகால் ஊற்றி தீ வைத்து கொளுத்திய மனைவி..!